Published : 05 Aug 2016 10:28 AM
Last Updated : 05 Aug 2016 10:28 AM

ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ்: லாபம் 15% உயர்வு

தகவல் தொழில்நுட்ப நிறுவனங் களுள் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் ரூ. 2,047 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபத்தை விட 15% அதிக மாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.1,783 கோடியாக இருந்தது.

நடப்பு நிதி ஆண்டில் நிறுவனத்தின் வளர்ச்சி 12 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை இருக்கும் என கணித்துள்ளது.

நிறுவனத்தின் வருமானம் 16% அதிகரித்து ரூ. 11,336 கோடியைத் தொட்டுள்ளது. முந்தைய ஆண்டில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 9,777 கோடியாக இருந்தது.

ஹெச்சிஎல் நிறுவனத்துக்கு வோல்வோ ஐடி சர்வீசஸ் பிரிவில் பணிகளை மேற்கொள்ள கிடைத்த ஒப்பந்தம் காரணமாக 4 கோடி டாலர் ஜூன் காலாண்டு வருமானத்தில் கிடைத்துள்ளது. பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு ரூ. 6 டிவிடெண்ட் அறிவித்துள்ளது.

முதல் காலாண்டில் 13 புதிய ஒப்பந்தங்கள் இந்நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x