Published : 20 Jul 2016 09:12 AM
Last Updated : 20 Jul 2016 09:12 AM

‘ரெயா ஹெல்த்கேர்’-ல் டிபிஜி குரோத் 220 கோடி ரூபாய் முதலீடு

டிபிஜி குரோத் நிறுவனம் பெங்களூரைச் சேர்ந்த ரெயா ஹெல்த் கேர் நிறுவனத்தில் ரூ.220 கோடி முதலீடு மேற்கொள்கிறது. சர்வதேச முதலீட்டு நிறுவனமான டிஜிபி குரோத் நிறுவனம் ரெயா ஹெல்த்கேரின் பெரும் பான்மையான பங்குகளை வாங்கியுள்ளது.

ரெயா நிறுவனத்தில் மேற்கொண்டுள்ள முதலீட்டின் மூலம் இந்திய மருத்துவச் சேவை துறை மற்றும் சர்வதேச மருத்துவச் சேவைத் துறையில் வலுவான கவனத்தை செலுத்த உள்ளோம் என்று டிபிஜி இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் இந்திய தலைவருமான புனித் பாட்டியா தெரிவித்துள்ளார்.

டிபிஜி குரோத் நிறுவனம் சர்வதேச அளவில் மருத்துவச் சேவை துறையில் 1,000 கோடி டாலருக்கும் அதிகமான முதலீடு களை மேற்கொண்டிருக்கிறது.

சர்வதேச அளவில் மருத்துவச் சேவை துறையில் கவனம் செலுத்தி வருகிறோம். நோயாளிகள் சிறப்பு மருத்துவர்களை நாடி செல்கின்றனர். இந்த துறையில் வாய்ப்புகள் அதிகமுள்ளது. என்று டிபிஜி குரோத் நிறுவனத்தின் பங்குதாரர் மாத்யூ ஹோபர்ட் குறிப்பிட்டார்.

ரெயா ஹெல்த் கேர் நிறுவனம் தாய் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ மையங்களை மதர்ஹுட் என்கிற பெயரில் இந்தியா முழுவதும் நடத்தி வருகிறது என்றும் டிபிஜி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

டிபிஜி குரோத் நிறுவனத்துடன் கூட்டு வைத்ததன் மூலம் எங்களது சேவையை இந்தியாவின் இன்னும் பல பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ய முடியும், மருத்துவ சேவை களில் மேலும் பல வாய்ப்புகளை வழங்க முடியும் என எதிர்பார்க் கிறோம் என்று மதர்ஹுட் நெட் வொர்க் நிறுவனத்தின் தலைவர் மொகம்மது ரெகான் சையத் குறிப்பிட்டார். இந்த நிறுவனத்தில் மலையாள திரைப்பட நடிகர் மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x