Published : 07 Mar 2017 10:27 AM
Last Updated : 07 Mar 2017 10:27 AM

ஹெச்1பி விசா திருத்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஹெச்1பி விசா திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவோடு சேர்த்து எல்-1 விசா திருத்த மசோதாவும் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான பாஸ்க்ரெல், டேவ் பிராட், ரோ ஹன்னா, பால் ஹோசர் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். ஏற்கெனவே அதிக எண்ணிக்கையில் திருத்த மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில் இந்த மசோதா தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ஊழியர்களுக்கு பாதுகாப்பு தரும் வகையிலும் இதுபோன்ற ஹெச் 1 பி விசாக்களின் மூலம் நடைபெறும் மோசடிகளைத் தடுக்கும் வகையிலும் திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய ஐடி துறை அமைப்பான நாஸ்காம் உறுப்பினர்கள் 4 பேர் அமெரிக்கா சென்று அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஹெச்1பி விசா மற்றும் எல்-1 விசா முக்கியத்துவத்தைப் பற்றி கூறினர். அதன்பிறகு இந்த சீர்திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக ஹெச்1பி, ஐஇஇஇ(IEEE), அமெரிக்க தொழிலாளர் நல கூட்டமைப்பு மற்றும் தொழிற்சாலை நிறுவனங்கள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் ஹெச்1பி விசா மற்றும் எல்-1 விசா திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.

இரு பிரநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டிலும் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டு சட்டமாக வந்தாலும் நிறுவனங்கள் நேர்மையோடு நடந்துகொள்ள வேண்டும். ஹெச்1பி விசாவில் வரக்கூடிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் அமெரிக்க ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் இந்த மசோதாவில் ஹெச்1பி மற்றும் எல்-1 விசாக்களுக்குரிய சம்பள விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

மேலும் நிறுவனத்தின் வேவ்வேறு கிளைகளிலிருந்து ஹெச்1பி விசா மற்றும் எல்-1 விசா மூலமாக வருவதை தடுக்கும் விதமாகவும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களில் மட்டும் இந்த விசாவை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும்படியும் இந்த மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x