Published : 09 Jan 2017 10:20 AM
Last Updated : 09 Jan 2017 10:20 AM

சர்வதேச காரணங்களால் இந்த ஆண்டு தங்க முதலீடு செய்வதில் கவனம் தேவை

2016-ம் ஆண்டு தங்கம் ஒரு அவுன்சுக்கு 1,375 டாலர் விலை யை தொட்டது. தற்போது அவுன் சுக்கு 1,178 டாலர் விலைக்கு வர்த் தகமாகி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த பிறகு பங்குச்சந்தை, கச்சா எண் ணெய் ஆகியவை உயர்ந்து வரு கிறது. அமெரிக்க பொருளாதாரம் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக் கும் என்று முதலீட்டாளர்கள் நம் பிக்கை தெரிவிக்கின்றனர். டொனால்டு ட்ரம்ப் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு உரிய உள் கட்டமைப்பு வசதிகளையும் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். மேலும் பெடரல் ரிசர்வ் இந்த வருடத்தில் வட்டி விகிதம் உயர்த் தப்படும் என்று கூறியுள்ளது போன்றவற்றால் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு ஏற்றதாக சூழல் இல்லை.

பதற்றம் அதிகரிக்கும் போது முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்வது நடக்கும். அப்போதுதான் தங்கம் விலை உயரும். இருப்பினும் இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்குப் பிறகு தங்கம் விலை உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் நெதர்லாந்தில் தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கு அடுத்ததாக ஏப்ரல் மாதத்தில் பிரான்ஸிலும், அக்டோபர் மாதத்தில் ஜெர்மனி நாட்டிலும் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஐரோப்பிய யூனியனி லிருந்து இங்கிலாந்து வெளியேறு வதற்கான செயல்பாடுகளும் நடை பெற்றுக் கொண்டே இருக்கின்றன.

இந்த காரணங்களில் சர்வதேச அளவில் பதற்றமான சூழல் உரு வாகலாம். அதனால் பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் தேவை உயரும். கடந்த வருடம் ஜூலை மாதம் பிரெக்ஸிட்டுக்கு பிறகு முதலீட்டாளர்களிடையே பதற்றம் நிலவியதால் டாலரும் தங்கமும் உயர்ந்து வர்த்தகமாகின. டொனால்டு ட்ரம்ப் பாதுகாப்பு கொள்கையால் மற்ற நாடுக ளுடான அமெரிக்க வர்த்தக உறவு பாதிக்கப்பட்டாலும் பொருளாதார வளர்ச்சி சுருங்கினாலும் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இது தங்கத்துக்கு சாதகமாக இருக்கும்.

இந்திய தங்க முதலீட்டாளர்கள் ரூபாயின் மதிப்பையும் கண் காணிக்க வேண்டும். தற்போதைய சூழலில் டாலருக்கு நிகரான ரூபா யின் மதிப்பு சரிவைக் கண்டு வரு கிறது. அதனால் அடுத்த மூன்று மாதங்களில் சர்வதேச வர்த்தகத் தில் தங்கத்தின் விலை குறைந் தாலும் ரூபாயின் மதிப்பில் விலை சிறிதளவே குறைய வாய்ப்புள் ளது. இருப்பினும் வருகிற பட்ஜெட் டில் தங்கத்துக்கான இறக்குமதி வரிக்கு சலுகை அறிவித்தால் நிவாரணமாக இருக்கும்.

டெக்னிக்கலாக பார்க்கும் போது தங்கத்தின் விலை சரிவடை வதற்கே வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. குறுகிய கால அடிப்படையில் அடுத்த மூன்று மாதங்களுக்கு விலை ஏற்ற இறக்கமாகவே இருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் அவுன்சுக்கு 1,120 டாலர் வரை குறை வாய்ப் பிருக்கிறது. விற்கும் போக்கு அதி கரித்தால் விலை 1,100 டாலரி லிருந்து 1,080 டாலர் வரை குறைய வாய்ப்புள்ளது. மேலும் ஏற்றத் திறகான இலக்கு 1,250 டாலரி லிருந்து 1,280 டாலர் வரை நிர்ண யிக்கலாம். ஆனால் இந்த வருட பாதியில் நாம் இலக்கை மறுபடி ஆய்வு செய்ய வேண்டும்.

குறுகிய கால வர்த்தகர்கள் மிக கவனமாக இருக்க வேண் டும். ஏனெனில் அடுத்த மூன்று மாதங்களுக்கு தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது. இருப்பி னும் தங்கத்திற்கான அடிப்படை கட்டமைப்பு வலுவாக இருக்கிறது. உங்களது போர்ட்போலியோவில் 10 சதவீதம் தங்கமாக வைத்துக் கொள்ளலாம். இந்திய முதலீட் டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் சிறந்த வழி தங்க கடன் பத்திர திட்டம். இதன் மூலம் உங்களது முதலீட்டை பாதுகாத்துக் கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x