Published : 11 Sep 2014 12:09 PM
Last Updated : 11 Sep 2014 12:09 PM

திபேந்தர் கோயல் - இவரைத் தெரியுமா?

$ ஆன்லைன் ரெஸ்டாரண்ட் நிறுவனமானஸோமேடோ (Zomato) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 12 நாடுகளில் இருக்கும் 2.3 லட்சம் ரெஸ்டாரண்ட்கள் இந்த ரெஸ்டாரண்டுடன் இணைக்கப்பட்டுள்ளன.

$ ஐஐடி டெல்லியில் கணிதமும் கணிப்பொறியும் படித்த இவர் பெயின் அண்ட் கம்பெனி நிறுவனத்தில் ஆலோசகராக பணிபுரிந்து வந்தார்.

$ தன்னுடைய சேமிப்பு பணத்தில் இருந்து 2008-ம் ஆண்டு Foodiebay.com என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். இருந்தாலும் பெயின் அண்ட் கம்பெனியில் நவம்பர் 2009 வரை பணியாற்றினார்.

$ இன்போஎட்ஜ் நிறுவனம் 2010-ம் ஆண்டு இவரது நிறுவனத்தில் 4.7 கோடி ரூபாயை முதலீடு செய்தது. அதன் பிறகு Foodiebay.com என்ற நிறுவனம் Zomato வாக பெயர் மாற்றப்பட்டது.

$ சரியான நபர்களை வேலைக்கு நியமித்துவிட்டால் அவர்களை நிர்வாகம் செய்யும் வேலை நமக்கு இல்லை. ஆனால் அது அவ்வளவு சுலபம் அல்ல என்று சொல்லுபவர்.

$ அதேபோல சரியான நபர்களுக்கு நாங்கள் அதிக சம்பளம் கொடுக்கிறோம். அப்போதுதான் அவர்களால் வேலையில் கவனம் செலுத்த முடியும். சரியான நபர்களுக்கு பணத்தை பற்றிய கவலை இருக்காது. ஆனால் அவர்களை கண்டுபிடிப்பதுதான் சிரமம் என்று சொல்லி இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x