Published : 22 Jun 2019 04:02 PM
Last Updated : 22 Jun 2019 04:02 PM

தங்கம் விலை இன்றும் உயர்வு: கிராம் ரூ. 3,259

தங்கம் விலை இன்றும் பவுனுக்கு 176 ரூபாய் அதிகரித்து 26 ஆயிரத்து 72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அமெரிக்க மைய வங்கி விரைவில் வட்டி குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது..

 

அமெரிக்க -சீனா வர்த்தகப் போரால் உலகப் பொருளாதாரம் மந்த கதியில் இருப்பது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது ஆகிய காரணங்களால் தங்கத்தை த்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளன. இதனால் கடந்த சில தினங்களாக தொடர்ந்து தங்கம் விலை உயர்வை கண்டு வருகிறது.

 

இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 22 ரூபாய் விலை உயர்ந்து 3 ஆயிரத்து 259 ரூபாய்க்கும், ஒரு பவுனுக்கு 176 விலை அதிகரித்து 26 ஆயிரத்து 72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

வெள்ளியின் வி‌லை கிராமிற்கு 30 காசுகள் விலை ஏற்றம் கண்டு 41.30  ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x