Published : 16 Mar 2018 09:03 AM
Last Updated : 16 Mar 2018 09:03 AM

இவரை தெரியுமா?: ராஜீவ் வாசுதேவா

நிறுவனங்களின் தலை மைச் செயல் அதிகாரிகளை பணியமர்த்தும் இகான் ஸெந்தர் மனித வள நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2014-ம் ஆண்டிலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.

நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர், இயக்குநர் குழு உறுப்பினர், செயற் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

உலக அளவில் பெரிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், இயக்குநர்களை தேடுவது, தலைமைக்கு தீர்வுகளை அளிப்பதில் வல்லுநர். 5 ஆண்டுகளில் 1,200 சிஇஓ-களை இவரது நிறுவனம் பணியமர்த்தியுள்ளது.

டைரக்ட் இம்பாக்ட் நிறுவனத்தின் இயக்குநர், டச் ரோஸ் நிறுவன ஆலோசகர், பிரைஸ் வாட்டர் கூப்பர் நிறுவனத்தின் ஆலோசகர் என பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இன்போஸிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரீக், இந்த நிறுவனத்தின் மூலம் பணியமர்த்தப்பட்டவர்.

இளநிலை பொருளாதார பட்டம் பெற்றவர். இந்திய பட்டயக் கணக்காளர், புதுடெல்லி பல்கலைக் கழகத்தில் சட்டம், மிச்சிகன் மேலாண்மை பள்ளியில் நிர்வாகவியல் உயர்கல்வி முடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x