Published : 06 Mar 2018 06:25 PM
Last Updated : 06 Mar 2018 06:25 PM

சுசுகி ஜிக்ஸர் 2018, ஜிக்ஸர் எஸ்எப் பைக்குகள் அறிமுகம்

 

சுசுகி ஜிக்ஸர் 2018 மற்றும் ஜிக்ஸர் எஸ்எப் பைக்குகள் இன்று அறிமுகம் செயயப்பட்டன.

சுசுகியின் மோட்டார் சைக்கிள் நிறுவனம் ஜிக்ஸர் மாடல் சிரீஸ் பைக்குகளை தயாரித்து வருகிறது. இந்த வகை பைக்குகளில் 2018-ம் ஆண்டு மாடல்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சுசுகி ஜிக்ஸர் 2018 மற்றும் ஜிக்ஸர் எஸ்எப் பைக்குகள் அறிமுகமாகியுள்ளன.

சுசுகி ஜிக்ஸர் 80,928 ரூபாய் விலையிலும், ஜிக்ஸர் எஸ்எப் பைக் 90,037 ரூபாய் விலையிலும் (டெல்லி எக்ஸே ஷோரும் விலை) கிடைக்கின்றன. இளைஞர்களை அதிகம் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்குகள், சிகப்பு, சில்வர், மெட்டாலிக் ப்ளூ மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கின்றன.

இந்த பைக்குகளின் இயந்திரங்களில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. இரண்டு பைக்குகளும் 155 சிசி மற்றும் ஒற்றை சிலிண்டர், ஏர் கூலர் இன்ஜின், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளிட்ட அம்சங்களுடன் தொடர்கிறது.

அதேசமயம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்கள் சற்று தரம் உயர்த்தப்பட்டுள்ளன. சுசுகியின் எக்கோ செயல்பாடு தொழில்நுட்பம் 14.8பிஎஸ் மற்றும் 14 என்எம் திறன் கொண்டது. சுசுகி பைக்குகளில் பயன்படுத்தப்பட்டு வரும் எரிபொருள் சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வசதிகள் இந்த பைக்குகளிலும் இடம் பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x