Published : 09 Mar 2018 09:48 AM
Last Updated : 09 Mar 2018 09:48 AM

இவரை தெரியுமா?: ஃபிரெடரிக் ஸ்மித்

சர்வதேச லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான ஃபெட் எக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 1971-ம் ஆண்டு முதல் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

பொருட்களை வேகமாக பிற இடங்களுக்கு அனுப்புவதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பது குறித்து பல ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார்.

2018-ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 382-வது இடத்தில் உள்ளார்.

2014-ம் ஆண்டில் உலகின் சிறந்த 50 தலைவர்கள் பார்ச்சூன் பட்டியலில் இடம்பெற்றவர்.

அமெரிக்க ராணுவத்தின் கடற்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

அமெரிக்க- சீன, அமெரிக்க-பிரான்ஸ் தொழில் கமிட்டிகள், மாயோ பவுன்டேஷன், அமெரிக்க விமான போக்குவரத்து கூட்டமைப்பு போன்றவற்றில் பொறுப்புகளை வகித்தவர்.

அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x