Published : 17 Apr 2019 08:15 AM
Last Updated : 17 Apr 2019 08:15 AM

காலாண்டு லாபம் ரூ. 2,484 கோடி ஊழியர்களின் கம்ப்யூட்டரில் தகவல் திருட்டு: விப்ரோ நிறுவனம் தீவிர விசாரணை

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணியில் விளங்கும் விப்ரோ நிறுவனத்தின் ஊழியர்களின் கம்ப்யூட்டரிலேயே ஊடுருவல் நடந்துள்ளது. ஹாக்கர்ஸ் எனப்படும் இணையதள திருடர்கள், ஊழியர்கள் சிலரின் தகவல் தொகுப்பில் ஊடுருவி தகவல்களை எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

தங்கள் நிறுவன ஊழியர்கள் சிலரின் கணக்குகளில் இத்தகைய ஊடுருவல் நடந்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடுகளை துரிதகதியில் மேற்கொண்டதாகவும், இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் நேற்று பங்குச் சந்தை வர்த்தக நேரம் முடிந்த பிறகு வெளியானது. ஆனால் நேற்று காலையிலேயே ஊழியர்களின் கம்ப்யூட்டரில் நடந்த ஊடுருவல் குறித்த தகவல் வெளியானது. இதனால் இந்நிறுவன பங்குகள் 3 சதவீதம் வரை காலையில் சரிந்தன.

இது குறித்து சைபர் செக்யூரிடி நிறுவனமான கிரெப்ஸ்ஆன் செக்யூரிடி யின் இணைய பக்கத்தில் விப்ரோ நிறுவனத் தின் ஊழியர்கள் இணையதளம் ஊடுருவப் பட்டுள்ளது. அதேபோல விப்ரோ நிறுவனம் நிர்வகிக்கும் வாடிக்கையாளர்களின் சாஃப்ட் வேர் மூலம் அந்நிறுவனத்திலும் ஊடு ருவல் நடைபெற்றிருக்கலாம் என கருதப் படுகிறது. சுமார் 11 நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சில தகவல்கள் கூறுகின்றன.

இருப்பினும் இந்த பிரச்சினையை துரித கதியில் அணுகி தீர்வு கண்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ. 2,484 கோடி லாபம்

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் விப்ரோ நிறுவனம் ரூ. 2,484 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டியதைக் காட் டலும் 38 சதவீதம் அதிகமாகும். முந்தைய காலாண்டில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 1,803 கோடியாகும்.

நிறுவனத்தின் வருமானம் ரூ. 13,824 கோடி யிலிருந்து ரூ. 15,038 கோடியாக உயர்ந்துள் ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனம் ரூ. 10,500 கோடிகளுக்கு பங்குகளை திரும்பப் பெறப் போவதாக அறிவித்துள்ளது. ஒவ்வொன்றும் ரூ. 325 விலையில் பங்குகளை வாங்கப் போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. வர்த்தகம் முடிவில் நிறுவனப் பங்குகள் 2.5 சதவீத அளவுக்கு சரிந்து ரூ. 281 என்ற விலையில் வர்த்தகமாயின.

2017-ம் ஆண்டு இந்நிறுவனம் ரூ. 11 ஆயிரம் கோடிக்கு பங்குகளை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x