Published : 11 Mar 2019 10:51 AM
Last Updated : 11 Mar 2019 10:51 AM

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அடுத்த மாதம் முதல் மானியம்: 3 ஆண்டுகளுக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு

எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் பயன்பாடு தொடர்பான ஃபேம் 2 திட்டத்தில் அடுத்த மாதம் முதல் ஊக்கத் தொகை வழங்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டைக் குறைப் பதற்காக எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் பயன்பாடு தொடர்பான ஃபேம் 2 திட்டமானது அரசால் வகுக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு அமல் படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்தில் எலெக்ட்ரிக் வாகனங் களுக்கு மானியம் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ. 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் துறை பெரிதும் எதிர்பார்த்துள்ள இந்தத் திட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. 10 லட்சம் வரையிலான இருசக்கர வாகனங்களுக்கு ஒரு வாகனத் துக்கு ரூ. 20 ஆயிரம் வீதமும், 35 ஆயிரம் முழுமையான எலெக்ட் ரிக் கார்களுக்கு ஒரு காருக்கு ரூ.1.5 லட்சம் வீதமும் மானியம் வழங்கப்பட உள்ளது. மேலும் 7,090 எலெக்ட்ரிக் பேருந்து களுக்கு, ஒரு பேருந்துக்கு ரூ.50 லட்சம் வீதம் மானியமும் வழங்கப்பட உள்ளது. அதே போல் 5 லட்சம் எலெக்ட்ரிக் ரிக்‌ஷாக்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் மானியம் தரப்பட உள்ளது.

2019-20-ம் நிதி ஆண்டுக்கு ரூ.1,500 கோடியும், 2020-21-ம் நிதி ஆண்டுக்கு ரூ.5,000 கோடி யும், 2021-22-ம் நிதி ஆண்டுக்கு ரூ.3,500 கோடியும் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x