Published : 03 Sep 2014 10:44 AM
Last Updated : 03 Sep 2014 10:44 AM
$ பிளாக்பெர்ரி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் இயக்குநர் குழு தலைவர். கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் இந்த பொறுப்பில் இருக்கிறார்.
$ நஷ்டத்தில் இருக்கும் நிறுவனங்களை லாப பாதையில் திருப்பும் ஆற்றல் பெற்றவர்.
$ பிளாக்பெர்ரி நிறுவனத்துக்கு முன்பு சைபேஸ் நிறுவனத்தில் இருந்தார். 70 சதவீதம் தோல்வி என்ற நிலைமையில் அந்த நிறுவனத்துக்கு 1998-ல் பொறுப்பேற்றார். இவர் தலைமையில் 55 காலாண்டுகளாக நிறுவனம் தொடர்ந்து லாபமீட்டியது.
$ இதற்கு முன்பு சிமென்ஸ், பிரமிட் டெக்னாலஜீஸ், பர்ரோ கார்ப் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிந்தவர்.
$ ஹாங்காங்கில் பிறந்த இவர், பிரவுன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்கும், கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் முதுகலை எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்கும் படித்தவர்.
$ சான்ஜோஸ் பல்கலைக்கழகம், ஹாங்காங் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறது. ‘த வால்ட் டிஸ்னி’ நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் இவர் இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT