Published : 02 Mar 2019 09:04 AM
Last Updated : 02 Mar 2019 09:04 AM

வீடியோகானுக்கு ஐசிஐசிஐ கடன் வழங்கிய வழக்கு: சந்தா கோச்சார், வேணுகோபால் தூத் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சந்தா கோச்சார் மற்றும் வீடியோகான் நிறுவனத் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத் துறை அதி காரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

வீடியோகான் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கி கடன் வழங் கிய விவகாரத்தில் மோசடி நடந் திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமலாக்கத் துறை தேடுதல் நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த சோதனை நடவடிக்கை யானது மும்பையில் உள்ள வீடியோ கான் நிறுவனத்தின் 5 அலுவலகங் கள் மற்றும் வேணுகோபால் தூத் வீட்டிலும் ஒருசேர நடத்தப் பட்டது.

அந்நியச் செலாவணி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் தொழிலதிபர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.1,875 கோடி கடன் வழங்கியதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் ஆதாயத்துக்காக கடன் வழங்கப் பட்டுள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறை அதிகாரிகள் உள்ளூர் போலீசாரின் உதவியோடு இந்த சோதனையை நடத்தினர்.

சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை அந்நியச் செலாவணி மோசடி வழக்கைப் பதிவு செய்துள்ளது.

சிபிஐ தனது குற்றப் பத்திரிகை யில் சந்தா கோச்சார், தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் மற்றும் அவ ரது நிறுவனங்களான வீடியோகான் இன்டர்நேஷனல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (விஐஇஎல்), வீடியோ கான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (விஐஎல்) ஆகியவற்றின் பெயரை யும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் வேணுகோபால் தூத் தொடங்கிய சுப்ரீம் எனர்ஜி, தீபக் கோச்சாரின் நூபவர் ரினியுவபிள்ஸ் ஆகியவற்றின் பெயரும் சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐ ஆர்) இடம்பெற்றுள்ளன.

தீபக் கோச்சாரின் நூபவர் நிறு வனத்தில் வேணுகோபால் தூத் முதலீடு செய்துள்ளார். இந்த முத லீடானது சுப்ரீம் எனர்ஜி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு மே 1-ம் தேதி ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதி காரியாக சந்தா கோச்சார் பொறுப் பேற்ற பிறகு வேணுகோபால் தூத் நிறுவனத்துக்கு கடன் வழங்க அனு மதி அளித்துள்ளார். அதன் பிறகே இந்த முதலீடு மேற்கொள்ளப் பட்டுள்ளது. கடனுக்கு வெகுமதி யாக இந்த முதலீடுகள் மேற்கொள் ளப்பட்டதாக சிபிஐ கூறியுள்ளது.

நூபவர் எனர்ஜி நிறுவனத்தின் உரிமம் மாற்றப்பட்டது மிகவும் சிக்க லான நடைமுறையைக் கொண்டுள் ளது. அத்துடன் தீபக் கோச்சார் மற் றும் வேணுகோபால் தூத் இடையே பங்கு பரிவர்த்தனை குழப்பமான வகையில் மேற்கொள்ளப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x