Published : 26 Sep 2014 11:13 AM
Last Updated : 26 Sep 2014 11:13 AM

தீபக் கபூர் - இவரைத் தெரியுமா?

$ பி.டபிள்யூ.சி. நிறுவனத்தின் தலைவர். 2011-ம் ஆண்டு மூன்று வருடங்களுக்கு தலைவராக நியமிக்கபட்டார். பிறகு 2014-ம் ஆண்டு இவரது பதவி காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

$ 1978-ம் ஆண்டு இந் நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அதன் பிறகு 1991-ம் ஆண்டு பங்குதாரராக இணைந்தார். 2007-ம் ஆண்டு நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார்.

$ ஆடிட்டரான இவர், பிறகு நிறுவனங்களை இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் (எம் அண்ட் ஏ) பிரிவில் நிபுணரானார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்.

$ பல நாடுகளிலும் பணியாற்றியவர். மேலும் தொலைத் தொடர்பு, மருத்துவம், தொழில்நுட்பம், ஊடகம் என பல துறை அனுபவம் பெற்றவர்.

$ கடந்த சில வருடங்களில் முன் தேதியிட்டு வரி விதிக்கப் பட்டதால், முதலீட்டு சூழ்நிலை பாதிக்கப்பட்டது. மேலும் சர்வதேச சூழலும் வளர்ச்சி குறைவுக்கு காரணம் என்று தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x