Published : 07 Dec 2018 09:35 AM
Last Updated : 07 Dec 2018 09:35 AM

சைபர் தாக்குதல்: ஆண்டுதோறும் ரூ.75 கோடி இழப்பு

சைபர் தாக்குதல் காரணமாக சாரசரி யாக ஆண்டுதோறும் ரூ. 75 கோடி அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. நேரடியாகவும், மறை முகமாகவும் இந்த இழப்பு ஏற்படு வதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

சைபர் தாக்குதல் காரணமாக வேலை இழப்பு உள்ளிட்ட நுண் பொருளாதார பாதிப்புகள் ஏற்படு வதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேரடியாக ஏற் படும் இழப்பு 90 ஆயிரம் டாலர் மட்டுமே. ஆனால் வேலை இழப்பு மற்றும் நிறுவனம் மீதான நம்பகத் தன்மை சிதைவது உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் இழப்பு 31 லட்சம் டாலராகும். இதேபோல நுண் பொருளாதார பாதிப்புகள் அதா வது வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைவது மற்றும் நிறுவனங் களுக்கு ஏற்படும் செலவு உள்ளிட்ட வற்றுக்கு ஆகும் செலவு 63 லட்சம் டாலர் என மதிப்பிடப்பட்டுள் ளது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நிகழும் சைபர் தாக்குதல்களால் ஏற் படும் பாதிப்புகள் குறித்து நடத்தப் பட்ட ஆய்வை மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் பிராஸ்ட் அண்ட் சல்லி வன் நிறுவனமும் இணைந்து நடத்தின. நடுத்தர நிறுவனங் களுக்கு சைபர் அட்டாக் காரணமாக ஏற்படும் இழப்பு 11 ஆயிரம் டாலர் என குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆய்வானது 1,300-க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் நடுத்தர ரக நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் 13 ஆசிய பசிபிக் நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உற்பத்தித் துறையில் ஏற்படும் பாதிப்பு 18 சதவீதம் எனவும், நிதித்துறையில் ஏற்படும் பாதிப்பு 12 சதவீதம் எனவும் கணக்கிடப் பட்டுள்ளது. அரசு நிறுவனங்களில் நடைபெறும் சைபர் அட்டாக் 11 சதவீதம் எனவும் மதிப்பிடப் பட்டுள்ளது.

ஏறக்குறைய சைபர் தாக்கு தலுக்கு 62 சதவீத நிறுவனங்கள் இந்தியாவில் ஆளாகியுள்ளது ஆய் வில் தெரியவந்தது. இருப் பினும் 38 சதவீத நிறுவனங்களே தொடர்ந்து இது குறித்து மதிப்பீடு செய்து தகவல் திருடப்பட்டதை வெளியிட்டுள்ளன.

டிஜிட்டல் துறைக்கு மாறும் நிறுவனங்களின் பிரதான விவாத மாக இடம்பெறுவது சைபர் தாக்கு தல் பற்றித்தான். ஆனால் பெரும் பாலான நிறுவனங்கள் சைபர் தாக்குதலுக்கு போதிய முக்கியத் துவம் அளிப்பதில்லை. 20 சதவீத நிறுவனங்களே ஆரம்பம் முதலே சைபர் தாக்குதலுக்கு முக்கியத் துவம் அளிக்கின்றன. சைபர் தாக்கு தலை தடுக்கும் நடவடிக்கைகள் எடுப்பதை விட வந்த பிறகு எடுக்கும் நடவடிக்கைகள் போதிய பலனைத் தருவதில்லை. ஆனால் 50-க்கும் அதிகமான பாதுகாப்பு தீர்வுகள்தான் அதிக அளவில் விற்பனையாகின்றன.

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம், சைபர் பாதுகாப்பு நட வடிக்கைகள் அனைத்தும் சைபர் தாக்குதலுக்கு தீர்வாகவும், இத் தகைய அச்சுறுத்தலை தடுக்கவும் உதவுவதாக ஆய்வு குறிப்பிடு கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x