Published : 02 Sep 2014 10:26 AM
Last Updated : 02 Sep 2014 10:26 AM

அஜோய் மிஸ்ரா - இவரைத் தெரியுமா?

$ டாடா குளோபல் பெவரேஜஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக கடந்த ஏப்ரல் 1-ம் தேதி பொறுப்பேற்றார்.

$ இதற்கு முன்பு சி.இ.ஓவாக இருந்த ஹரிஷ் பட், டாடா குழுமத்தின் மூத்த ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்டதால் துணை சி.இ.ஓ.வாக இருந்த இவரை இந்த பொறுப்பு இயக்குநர் குழு நியமித்தது.

$ டாடா குழுமத்தில் 30 வருடங்களுக்கு மேலான அனுபவம் இவருக்கு இருக்கிறது. டாடா குளோபல் பெவரேஜஸ் நிறுவனத்துக்கு வரும் முன்பு, தாஜ் குழும ஓட்டல்களில் முக்கியமான பொறுப்புகளில் இருந்திருக்கிறார்.

$ பிட்ஸ் பிலானியில் சிவில் இன்ஜினீயரிங்கும், டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏவும், ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் நிர்வாக பயிற்சியும் பெற்றவர்.

$ கிரீன் டீ உள்ளிட்ட ஆரோக்கியமான பானங்களை பருக ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களின் தேவைக்கு ஏற்ப புதிய சுவைகளில் கிரீன் டீ-யுடன் கொழுப்பு மற்றும் கஃபீன் (caffeine) குறைவான பானங்களையும் கொண்டுவரப்போகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x