Published : 08 Nov 2018 08:55 AM
Last Updated : 08 Nov 2018 08:55 AM

துபாயில் 11 இடங்களில் உள்ள நீரவ் மோடி நிறுவன சொத்துகள் முடக்கம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி அளவுக்கு ஏமாற்றி வெளிநாட்டில் தலைமறைவாக வாழும் வைர வியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமாக துபா யில் உள்ள சொத்துகளை அம லாக்கத்துறை முடக்கியுள்ளது

இந்த சொத்துகள் அனைத்தும் நீரவ் மோடிக்கும் அவரது குழு மத்தைச் சேர்ந்த மெசர்ஸ் ஃபயர் ஸ்டார் டயமண்ட் எப்இஸட்இ நிறு வனத்துக்கும் சொந்தமான தாகும். இவற்றின் மதிப்பு ரூ. 56.80 கோடியாகும்.

அந்நியச் செலாவணி மோசடி செய்த குற்றத்துக்காக நீரவ் மோடி சொத்துகள் முடக்கப்படுவதாக அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் அமலாக்கத்துறை ரூ. 637 கோடி மதிப்புள்ள சொத்து களை முடக்கியது. இவை அனைத் தும் நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான தாகும். இவற்றில் நியூயார்க்கில் உள்ள 2 அடுக்குமாடிக் குடியிருப் பும் அடங்கும்.

முடக்கப்பட்ட சொத்துகளை மீட் பதற்கு உரிய நீதிமன்ற உத்தரவு களை துபாயில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு முறைப்படி சமர்ப்பிக்கும் என்றும் அம லாக்கத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x