Published : 28 Nov 2018 10:44 AM
Last Updated : 28 Nov 2018 10:44 AM

ஈரோட்டில் ஜவுளி கண்காட்சி

இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் டெக்ஸ்வேலி இணைந்து பிரம்மாண்டமான ஜவுளி கண்காட்சியை நடத்த உள்ளது. இக்கண்காட்சி ஈரோட் டில் டிசம்பர் 5-ம் தேதி தொடங்கி 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வீவ்ஸ் என்ற பெயரில் தமிழக அரசுடன் இணைந்து இக்கண்காட்சி நடத்தப்பட உள் ளது. விசைத்தறி, கைத்தறி தொழிலை மேம்படுத்தும் வகை யில் 250-க்கும் மேற்பட்ட பங்கேற் பாளர்கள் தங்களது தயாரிப்பு களை இக்கண்காட்சியில் காட்சிப் படுத்த உள்ளனர்.

நமது பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் இணைந்த கலவை யாக இந்த நான்கு நாள் கண்காட்சி திகழும். இதில் இரண்டு நாள் சிறப்பு கருத்தரங்கிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருங் கிணைப்பின் அவசியம், துணி உற்பத்தி, தொழில் இணைப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இக்கண்காட்சியில் பிரபல பிராண்டுகளான பிர்லாவின் லிவா, ரிலையன்ஸ், லாயல் டெக்ஸ் டைல்ஸ், பிகேஎஸ் ஸ்வாஸ், ஜான் சன் குழுமம், சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்க ளது தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளன. கூட்டுறவு சங்கங்களின் கைத்தறி தயாரிப்புகளும் இடம் பெற உள்ளன.

ஜவுளி ஆய்வு மையங்கள் சிட்ரா, ஏபெக், ஃபியோ, டெக்ஸ் புரோசில், டீ, எஸ்ஆர்டிஇபிசி, ஹெச்இபிசி, சைமா உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்ற உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x