Published : 19 Nov 2018 08:54 AM
Last Updated : 19 Nov 2018 08:54 AM

தொழில் செய்வதற்கு ஏற்ற சூழல் குறித்த கூட்டத்தில் தொழிலதிபர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

தொழில் செய்வதற்கு ஏற்ற சூழல் தரப் பட்டியலில் இந்தியா முதல் 50 இடங்களுக்குள் இடம்பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு தொழிலதிபர்கள், கொள்கை வகுக்கும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார்.

உலக வங்கி அக்டோபர் 31ல் வெளியிட்ட தொழில் செய்வதற்கான ஏற்ற சூழல் தரப் பட்டியலில், கடந்த ஆண்டு 100 வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 23 இடங்கள் முன்னேறி 77வது இடத்தை எட்டியுள்ளது தெரியவந்தது. இது மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாகப் பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் தொழில் செய்வதற்கு ஏற்ற சூழலை மேலும் மேம்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

50 இடங்களுக்குள்

இந்தியா உலக வங்கியின் தொழில் செய்வதற்கு ஏற்ற சூழல் தரப் பட்டியலில் 50 இடங்களுக்குள் முன்னேற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்காக முன்னணி நிறு வனங்களின் தொழிலதிபர்களும், கொள்கை வகுக்கும் அதிகாரி களும் இன்று கூடி ஆலோசிக்க உள்ளனர். சிஐஐ, பிக்கி, அசோசம் உள்ளிட்ட தொழில் துறை கூட்டமைப்பின் முக்கியப் பிரதிநிதிகளும் கலந்துகொள் கின்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை ஏற்பாடு செய் துள்ளது. தொழில் செய்வதற்கு ஏற்ற சூழலில் முன்னேறுவதன் மூலம் அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்க முடியும் என்பதால் இந்த முயற்சியை அரசு எடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி யும் கலந்துகொள்கிறார். தொழிலதி பர்களுடனும், அதிகாரிகளுட னும் இந்தியாவில் தொழில் செய்வ தற்கான சூழலை மேம்படுத்துவது பற்றி ஆலோசிக்க உள்ளார்.

ஆலோசனை கூட்டத்தில் நடக்கும் விவாதங்கள், முன் வைக்கப்படும் ஆலோசனைகள், கருத்துகள் ஆகியவற்றை அடிப் படையாக வைத்து என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதற்கான செயல்திட் டத்தை உருவாக்க உள்ளனர்.

வரும் 2019 மே மாதத்தில் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலை யில் பாஜகவுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் சராமாரி குற்றச்சாட்டு களை முன்வைத்து வருகின் றன.

இந்நிலையில் மோடி தலை மையிலான மத்திய அரசு அந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதி லடி கொடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. தொழில் செய்வதற்கு ஏற்ற சூழல் தரப்பட்டியலில் இந்தியா அடைந்த முன்னேற்றம் பாஜக அரசுக்குச் சாதகமாகவே பார்க்கப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x