Published : 09 Aug 2014 10:00 AM
Last Updated : 09 Aug 2014 10:00 AM

ராகேஷ் சர்னா - இவரைத் தெரியுமா?

$ டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. செப்டம்பர் 1-ம் தேதி முதல் பொறுப்பேற்க இருக்கிறார்.

$ இவருக்கு முன்பு தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த ரேமண்ட் பிக்சன் ராஜினாமா செய்ததை அடுத்து இயக்குநர் குழு ராகேஷ் சர்னாவை தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்துள்ளது.

$ ஹோட்டல் நிர்வாகத்தில் 30 வருடங்களுக்கு மேலான அனுபவம் மிக்கவர். இதற்கு முன்பு ஹயாத் குழும ஹோட்டல்களில் அமெரிக்க பிரிவுத் தலைவராக இருந்தார்.

$ ஹயாத் குழுமத்தில் 1979-ம் ஆண்டு இணைந்தார். தலைமைச் செயல்பாட்டு அதிகாரி, தலைவர் என பல முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார். மேலும், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பணி புரிந்துள்ளார்.

$ கனடாவின் ஒட்டாவா நகரத்தில் இருக்கும் கல்லூரியில் ஹோட்டல் நிர்வாகம் படித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x