Published : 27 Oct 2018 09:33 AM
Last Updated : 27 Oct 2018 09:33 AM

இந்தியாவுடனான இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புதல்: மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் அளவை அதிகரிக்க சீனா உறுதியளித்துள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப்போர் தீவிரமாக உள்ள நிலையில் சர்வதேச வர்த்தக சூழல் இந்தியாவுக்குச் சாதகமாக மாறியுள்ளது. இதனால் உலகின் பல்வேறு நாடுகள் இந்தியச் சந்தையை எதிர்நோக்கியிருக்கின்றன.

தற்போது  இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் அளவை அதிகரிப்பதாக சீனா கூறியுள்ளது. இந்தத் தகவலை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். 

இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் மேலும் கூறியதாவது, “சீன அதிகாரிகள் நவம்பரில் இந்திய ஏற்றுமதியாளர்களுடன் ஒரு சந்திப்புக் கூட்டத்தை நடத்த உள்ளனர்.

அப்போது வர்த்தக ஒழுங்குமுறை, சந்தை அனுமதிபோன்றவற்றில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க உள்ளனர். சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

சீனாவின் வடக்குப் பகுதி நாடுகளுடனான வர்த்தகம் அபரிமிதமாக உள்ளது. இந்தியாவுடனான வர்த்தக இடைவெளியைக் குறைக்க அரிசி, கடுகு உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை அதிகரிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x