Last Updated : 13 Aug, 2014 11:44 AM

 

Published : 13 Aug 2014 11:44 AM
Last Updated : 13 Aug 2014 11:44 AM

ஒரு ‘கமா’வும் உணவு மானியக் கொள்கையும்..

ஒரு காற்புள்ளியால் (கமா) 121 கோடி மக்களைக் கொண்ட ஒரு தேசத்தின் உணவு மானியக் கொள்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றால் நம்புவீர்களா? அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

ஒரு வாக்கியத்தின் இடையே இடப்பட்ட ஒரு காற்புள்ளி (கமா) பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த உலக வர்த்தக அமைப்பின் (WTO) கூட்டத்திற்கு பிறகு அந்த அமைப்பின் உணவு மானியம் தொடர்பான ஓர் அறிக் கையில் வாக்கியத்தின் இடை யில் காற்புள்ளி (கமா) இடம் பெற்றுள்ளது. அங்கு கமா இடம்பெற்றிருப்பதால் ஓர் அர்த்தமும், அதே இடத்தில் ‘அல்லது’ (or) என்று இருந்தால் வேறு அர்த்தமும் இருக்கும் என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர். இல்லை அவை இரண்டுமே ஒரே அர்த்தத்தைத்தான் கொடுக்கின்றன என்று வேறு சாரார் கூறுகின்றனர்.

ஓர் உதாரணத்தோடு ஆரம்பிப் போம். பாண்டா (Panda) என்ற அரியவகை கரடியைப் பற்றிய ஒரு புத்தகத்தில் `பாண்டா, குருத்து, இலைகளை உண்ணும்’ என்பதை `Panda eats shoots and leaves' என்று ஆங்கிலத்தில் குறிப் பிடப்பட்டிருந்தது. இதே ஆங்கிலத் தொடரில், ‘eats’ என்ற சொல்லுக்கு பிறகு காற்புள்ளி (கமா) இருந்தால் இந்த தொடருக்கு வேறு அர்த்தம் வரும். `Panda eats, shoots and leaves” என்று இருந்தால், அதனின் அர்த்தம் `பாண்டா உண்ணும், சுடும், பிறகு செல்லும்’ என்று அர்த்தமாகிவிடும். இப்போது ‘கமா’ வின் முக்கியத்துவம் புரிந் திருக்கும்.

2013, டிசம்பர் மாதத்தில் பாலி தீவில் நடைபெற்ற WTO கூட்டத்தில் கீழ்காணும் முடிவு எடுக்கப்பட்டது.

“Members agree to put in place an interim mechanism and to negotiate on an agreement for a permanent solution for the issue of public stockholding for food security purposes for adoption by the 11th Ministerial Conference (2017). In the interim, until a permanent solution is found, and provided that the conditions set out below are met, member shall refrain from challenging through the WTO Dispute Settlement Mechanism.”

“உணவு பாதுகாப்புக்காக அரசு உணவு சேமிப்பது தொடர்பாக ஓர் இடைக்கால வழிமுறையும் மற்றும், 11-வது அமைச்சரவை மாநாட்டில் (2௦17) நிறைவேற்றக்கூடிய நிலை யான தீர்வினையும் ஏற்படுத்த உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டனர். இடைப்பட்ட காலத்தில், நிலை யான தீர்வு ஏற்படும் வரை, கீழ்க்காணும் நிபந்தனை கள் பின்பற்றப்பட்டால், மற்ற உறுப்பு நாடுகள் பிரச்சினைகள் தீர்ப்பாயத்தை அணுகக்கூடாது''.

இங்கு அடிக்கோடிட்ட பகுதியை பாருங்கள். இதில், `இடைப்பட்ட காலத்தில்’ என்ற வார்த்தைகளுக்கு பின் ‘கமா’ வருவதால் இருவேறு அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஒன்று, காங்கிரஸின் முன்னாள் வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, இடைப்பட்ட காலம் என்பது ‘நிலையான தீர்வு காணும்வரை’ என்ற அர்த்தத்தில் இருக்கிறது என்று கூறுகிறார். அதாவது, 2017-க்குள் நிலையான தீர்வு காணவில்லை என்றால், அத்தீர்வு எப்போது காணப்படுகிறதோ அதுவரை இடைப்பட்ட காலம் தான். எனவே, அதுவரை இந்தியா தொடர்ந்து உணவு மானியத்தை அதிகரித்துக்கொண்டே போகலாம் என்பது ஆனந்த் சர்மாவின் வாதம்.

தற்போதைய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் `இடைப்பட்ட காலம் என்பது 2017-ம் ஆண்டு வரைதான், அதற்குள் நிலையான தீர்வு காணவில்லை என்றாலும், அதன் பிறகு நாம் நமது உணவு மானியத்தை வெகு வாக குறைக்கவேண்டி வரும். இந்த தொடரில் `இடைப்பட்ட காலம் (அல்லது) நிலையான தீர்வு காணும் வரை' என்று இருந்திருந்தால், ஆனந்த் சர்மா சொல்வது பொருந்தும் என்று கூறியுள்ளார்.

இதனை WTO சட்ட வல்லுநர் கள் எப்படி அர்த்தப்படுத்தபோகி றார்கள், WTO எப்படி முடிவு எடுக் கப்போகிறது என்பதை பொறுத் திருந்து பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x