Published : 07 Aug 2018 10:20 AM
Last Updated : 07 Aug 2018 10:20 AM

சொந்த பண்ணையில் உற்பத்தியாகும்‘ஹேப்பி டேல்ஸ்’ கறந்த பால் அறிமுகம்

நிகழ்ச்சி மேலாண்மை துறையில் ஈடுபட்டுள்ள கிராவிட்டி எண்டெர் டெய்ன்மெண்ட் நிறுவனம் பால் உற்பத்தி துறையில் இறங்கியுள்ளது. மிட் வேலி என்கிற பெயரில் ஒருங்கிணைந்த பண்ணையம் முறையில் விவசாயத் துறையில் இறங்கியுள்ளது. இந்த நிறுவனம் நேற்று ஹேப்பி டேல்ஸ் என்கிற பால் பிராண்டை அறிமுகம் செய் துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஜயகுமார் கூறுகையில்,

கறந்த பாலை உடனடியாக குளிர் வித்து டெட்ரா பேக்கிங் செய்து நேரடி விற்பனை செய்ய உள் ளோம். இதற்காக எங்களுக்குச் சொந்தமான பண்ணையில் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரம் பலூர் மாவட்டத்தில் 100 ஏக்கரில், 400 மாடுகளுடன் சர்வதேச தரத் தில் சொந்த பண்ணை உருவாக்கப் பட்டுள்ளது. கறந்த பாலை பதப் படுத்தி 12 மணி நேரத்துக்குள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க உள்ளோம். இதற்காக பிரத்யேக ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்களின் ஆர் டர்களுக்கு ஏற்ப விநியோகம் இருக்கும். தற்போது சென்னை சந்தையின் தேவைகளுக்கும், இதற் கடுத்து கோயம்புத்தூர், பெங்களூர் நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்ய உள்ளோம்.

இந்த பண்ணை உருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு களுக்கு 18 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். 2020-ம் ஆண்டுக்குள் 10,000 லிட்டர் பால் உற்பத்தி என்கிற இலக்கு வைத் துள்ளோம் என்றார். எதிர்காலத்தில் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யும் திட்டம் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x