Published : 10 Jul 2018 08:22 AM
Last Updated : 10 Jul 2018 08:22 AM

செயலிகள் மூலம் தகவல் திருட்டு: நிபுணர்கள் எச்சரிக்கை

சில பிரபலமான செயலிகள் (ஆப்) மூலம் உங்களது ரகசிய தகவல்கள் திருடப்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள் ளனர்.

சில செயலிகள் உங்களது செல்போனில் ரகசியமாக ஸ்கிரீன்ஷாட் மூலம் அனைத்து தகவல்களையும் பதிவு செய்து அனுப்பிவிடும். உங்களது வங்கியின் பாஸ்வேர்டு, கிரெடிட் கார்டு எண் உள்ளிட்ட முக்கியமான தகவல்களை அது பதிவு செய்து மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பும். அமெரிக்க பேராசிரியர் டேவிட் சோபின்ஸ் நடத்திய ஆராய்ச்சியில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் 17 ஆயிரம் செயலிகளை இதுகுறித்து ஆய்வு செய்ததில் 9 ஆயிரம் செயலிகள் தகவல்களை திருட வசதியாக புரோகிராம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x