Published : 03 Jun 2018 08:46 AM
Last Updated : 03 Jun 2018 08:46 AM

சர்க்கரைக்கு கூடுதல் வரி விதிக்க முடிவு: சட்ட அமைச்சகம் அனுமதி

சர்க்கரைக்கு கூடுதல் வரி விதிக்க சட்ட அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. எனினும் இது தொடர்பான இறுதி முடிவுகளை மாநிலங்களின் நிதியமைச்சர்கள் மேற்கொள்வர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கூடுதல் வரி ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதிக்கு பிறகே நடைமுறைப்படுத்தப்படும். இது தொடர்பாக விவாதிக்க மாநில நிதி அமைச்சர்களின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

இது தொடர்பாக பேசிய மூத்த அதிகாரிகள், இந்த கூடுதல் வரி ஜிஎஸ்டியிலிருந்து வேறுபட்டதாக இருக்கும். மதிப்புக் கூட்டு வரியின் கீழ் கணக்கிடப்படும். இது தொடர்பாக சட்ட அமைச்சகத்தின் விரிவான அறிக்கை மத்திய நிதி அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினர். ஜிஎஸ்டி சட்டத்தின் சட்டபூர்வ அனுமதிக்காக உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவிற்கு நிதியமைச்சகம் பதில் மனு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினர். இதர கூடுதல் வரி விதிப்புகள் தொடர்பாகவும் சட்ட அமைச்சகம் நிதியமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இந்த வரைவுத் திட்டத்தின்படி ஒரு கிலோ சர்க்கரையின் மீது ரூ.3-க்கு மிகாமல் கூடுதல் வரி இருக்கும். (5 சதவீத ஜிஎஸ்டி இல்லாமல்)

விவசாயிகளை கலந்தாலோசித்து அவர்களை பாதுகாக்கும் விதமாக இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்கிறது. இதன் மூலம் ரூ.6,700 கோடி வரி கிடைக்கும் என அரசு எதிர்பார்க்கிறது. மே 4-ம் தேதி கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த கூடுதல் வரி விதிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு ஆந்திர பிரதேசம், கேரளா, மேற்கு வங்க மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த முன்வரைவில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளதாக இந்த மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கூறினர்.

மத்திய நிறுவனங்கள் விவகார அமைச்சகம் இந்த கூடுதல் வரி விதிப்பு முன்வரைவை தொடங்கியது. சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.19,000 கோடி வரை அளிக்க வேண்டியுள்ளது. கடந்த ஆண்டு நிலுவைத் தொகையாக ரூ.9,500 கோடி அளிக்க வேண்டியுள்ளன. இதனால் சர்க்கரைக்கான கூடுதல் வரி விதிப்பின் மூலம் விவசாயிகளின் குறைகளை தீர்க்க முடியும். இந்த கூடுதல் வரி சர்க்கரை மேம்பாட்டு நிதியத்துக்காக விதிக்கப்படுகிறது. இந்த நிதி விவசாயிகளுக்கான கடன் உள்பட பல்வேறு செலவினங்களுக்கு பயன்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x