Published : 01 May 2018 09:53 AM
Last Updated : 01 May 2018 09:53 AM

ஓய்வூதியத் தொகை முதலீட்டை அதிகரித்தால் பங்குச் சந்தை மேலும் முன்னேற்றமடையும்: பிஎஃப்ஆர்டிஏ தலைவர் கருத்து

இந்தியாவின் 2,30,000 கோடி டாலர் மதிப்புடைய பங்கு சந்தையில், தேசிய ஓய்வூதியத் திட்ட தொகையை அதிக அளவில் முதலீடு செய்வதன் மூலம் மேலும் முன்னேற்றமடையும் என ஓய்வூதியத் தொகை ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (பிஎஃப்ஆர்டிஏ) தலைவர் ஹேமந்த் கான்ட்ராக்டர் கூறியுள்ளார்.

அரசு ஊழியர்கள் ஓய்வூதியத் தொகை முதலீடு செய்யும் விகிதத்தை மேலும் அதிகரிக்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

தனியார் துறை ஓய்வூதியங்கள் சந்தையில் முதலீடு செய்யப்படுவதற்கு நிகராக தேசிய ஓய்வூதியத் திட்ட தொகையும் 50 சதவீதம் அளவுக்கு முதலீடு செய்யப்படவேண்டும் என அரசைக் கேட்டுக்கொண்டுள்ளோம், இதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்திய பங்குச் சந்தை மதிப்பு மேலும் உயரும். பிஎஃப் திட்டத்தில் இருக்கும் ஊழியர்கள் தாங்கள் விரும்பினால் தேசிய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்.

மற்ற திட்டங்களில் வட்டி விகிதங்கள் குறைந்து வரும் நிலையில் பங் குச் சந்தை முதலீட்டை சரியாக மேற்கொண்டால் வருவாய் அதிகரிக்கும். அரசு ஊழியர்கள் அல்லாதவர்களின் ஓய்வூதியத் தொகையை 75 சதவீதம் அளவுக்கு முதலீடு செய்வது குறித்த திட்டங்களும் உள்ளன என்று ஹேமந்த் கான்ட்ராக்டர் கூறினார்.

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் மொத்தமுள்ள 2.3 லட்சம் கோடி ரூபாயில் 87 சதவீத பங்களிப்பு அரசு ஊழியர்களுடையது ஆகும்.

2004-ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் பின்னர் நாட்டின் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. தேசிய ஓய்வூதியத் திட்டம் தவிர , பிஎஃப் திட்டமும் நடைமுறையில் இருந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x