Published : 23 May 2018 09:21 AM
Last Updated : 23 May 2018 09:21 AM

போலி ரசீதுகள் மூலம் ரூ.450 கோடி உள்ளீட்டு வரி வரவு மோசடி

போலி ரசீதுகள் மூலம் ரூ.450 கோடி ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி வரவு (இன்புட் டாக்ஸ் கிரெடிட் ) மோசடியை வரித்துறை நுண்ணறிவு பிரிவு கண்டுபிடித்துள்ளது. ரூ.180 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு மோசடியில் 2 தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போலியான ரசீதுகள் மூலம் இன்புட் டாக்ஸ் கிரெடிட் மூலம் வரியைத் திரும்ப பெறுவதிலும் ரூ.450 கோடி மோசடி நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக வெளியான தகவல்களில் தெரிய வந்துள்ளதாவது, ரூ.2,500 கோடி மதிப்புக்கு போலியான கொள்முதல் ரசீதுகளை அளித்து 18 சதவீத வரி விகித கணக்கில். ரூ.450 கோடி வரை இன்புட் டாக்ஸ் கிரெடிட் பெற்றுள்ளனர்.

உள்ளீட்டு வரி பெறுவதற்காக போலியான ரசீதுகளை அளித்தவர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மீரட்டில் அமைந்துள்ள ஜிஎஸ்டி மற்றும் சேவை வரி நுண்ணறிவு பிரிவு புலனாய்வு இயக்குநர் அலுவலகம் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் உற்பத்தி வரி, சேவை வரிக்கு மாற்றாக ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது. இதனால் இந்த விவகாரத்தில் அசல் ஆவணங்களை விசாரனைக்கு சமர்பிக்க வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று வரித்துறை கூறியுள்ளது.

சில முறைகேடான தொழில்கள் முறைகேடான வழியில் ரசீதுகளை தயாரிக்கின்றன. இதன் மூலம் இதற்கான பில் கமிஷன் தொகை அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பல தொழில்கள் பி2பி (business -to business) என்கிற வடிவத்தில் தொழில் செய்து வருகின்றனர். இதன் காரணமாக ஒரு இடத்தில் செலுத்தப்படும் வரியை இன்புட் டாக்ஸ் கிரெடிடாக பெற்றுக் கொள்ளலாம் என்கிற நடைமுறை உள்ளது. இந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் டிசம்பர் வரையில் சுமார் 1.6 லட்சம் கோடி பேர் இன்புட் டாக்ஸ் கிரெடிட் கொடுத்துள்ளனர். இந்த வகையில் 90 சதவீதம் பேர் கிளைம் செய்துள்ளனர். இதற்கான ஆய்வினை இத் துறையின் நுண்ணறிவு பிரிவு மேற்கொண்டுள்ளது.

இதற்கு முன்னதாக ஹொரி சான் அவுட்சோர்ஸ் சொல்யூஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் இயக்குநர் அமித் உபாத்யாய, பெஸ்ட் கம்ப்யூட்டர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஆசாத் அன்வர் ஆகியோர் முறையே ரூ.48 கோடி மற்றும் ரூ.80 கோடி முறைகேடு செய்ததாக ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு நிறுவனங்களும் பொருட்களை தங்களுக்குள் வாங்கியதாகவும், விற்றதாகவும் ரசீதுகள் பரிமாறிக்கொண்டதாகவும் ஆனால் பொருட்களை வாங்கவோ அல்லது விற்கவோ இல்லை என ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தை ஏமாற்றும் வகையில் இவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரும் ஜூன் மாதம் 2-ந் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மோசடி 200 கோடியை தொடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 2016 முதல் ஜூன் 2017 வரையிலான காலகட்டத்தில் ரூ.46 கோடி அளவுக்கு சேவை வரி ஏய்ப்பு செய்ததாக அமித் உபாத்யாய மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x