Published : 04 Apr 2018 09:47 AM
Last Updated : 04 Apr 2018 09:47 AM

சாப்ட்பேங்க், அலிபாபா நிறுவனங்கள் பேடிஎம் மாலில் ரூ.2,900 கோடி முதலீடு

பேடிஎம் மால் நிறுவனத்தில் சாப்ட்பேங்க் மற்றும் அலிபாபா ஆகிய நிறுவனங்கள் ரூ.2,900 கோடியை முதலீடு செய்திருக்கின்றன. பேடிம் நிறுவனத்தின் துணை நிறுவனமான பேடிஎம் மால் நிறுவனத்துக்கு கிடைத்துள்ள முதலீடு காரணமாக ஏற்கெனவே இ-காமர்ஸ் துறையில் உள்ள பிளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்கான பலம் கிடைக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பேடிஎம் மால் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 200 கோடி டாலர் இருக்க கூடும் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஒப்புக்கொள்ளப்பட்ட முதலீடு படிப்படியாக செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சாப்ட்பேங்க் நிறுவனம் பேடிஎம் மாலின் போட்டி நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்திலும் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த முதலீடு நிறுவனத்துக்கு பலத்தினை உயர்த்தும். தொழில் நுட்பம், லாஜிஸ்டிக்ஸ், வாடிக்கையாளர்களின் அனுபவத்தை சிறப்பாக்குவது உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் என பேடிஎம் மால் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி அமித் சின்ஹா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x