Published : 17 Apr 2018 09:05 AM
Last Updated : 17 Apr 2018 09:05 AM

அடுத்த 12 மாதங்களுக்குள் 10,000 பேட்டரி ஆட்டோக்களை இயக்க ஓலா நிறுவனம் திட்டம்

அடுத்த 12 மாதங்களுக்குள் 10,000 பேட்டரி ஆட்டோக்களை ஓலாவுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓலாவின் ‘மிஷன் எலெக்ட்ரிக்’ என்ற திட்டத்தின் அடிப்படையில் இவை ஓலா நிறுவனத்தில் சேர்க்கப்பட இருக்கின்றன. இதுகுறித்து நிறுவனத்தின் இணை நிறுவனர் பவிஷ் அகர்வால் கூறியதாவது,

பேட்டரி வாகனங்களை ஊக்குவிக்கும் விதத்தில் 2021-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேட்டரி வாகனங்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டு மே மாதத்தில் பேட்டரி வாகனத் திட்டத்தை நாக்பூரில் தொடங்கினோம். இதுவரை 40 லட்சம் கிலோ மீட்டருக்கும் அதிகமாக பேட்டரி வாகனங்களை இயக்கியுள்ளோம். இந்த அனுபவத்துடன் இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்த உள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x