Published : 01 Apr 2024 06:18 AM
Last Updated : 01 Apr 2024 06:18 AM

ஹுண்டாய் - தொழில் பாதுகாப்பு துறை இணைந்து 53-வது தேசிய பாதுகாப்பு தினம் கடைபிடிப்பு

53-வது தேசிய பாதுகாப்பு தின நிகழ்ச்சியில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான ‘ஆட்டோமொபைல் துறையில் பாதுகாப்பு’ எனும் கையேடு வெளியிடப்பட்டது.

சென்னை: ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தமிழ்நாடு தொழில் துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகத்துடன் இணைந்து 53-வது தேசிய பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சியின்போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அமைந்துள்ள மோட்டார் வாகனதொழிற்சாலைகளில் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்புஅதிகாரிகளுக்கான ‘ஆட்டோமொபைல் துறையில் பாதுகாப்பு’ எனும் கையேடு வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் எம்.வி.செந்தில் குமார் உரையாற்றும்போது, ``தேசிய பாதுகாப்பு தினம் என்பது அனைத்து தொழிற்துறைகளிலும் பாதுகாப்புக் கலாச்சாரத்தை நிலவச் செய்து, பணியாளர்களையும், நிறுவனங்களையும் அனைத்தையும் விட பாதுகாப்பை முதன்மையானதாகக் கருத ஊக்கப்படுத்துகிறது'' என்றார்.

ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அன்சு கிம் உரையாற்றியபோது, ``பாதுகாப்பு மீதான எங்களது ஈடுபாடு வெறுமனே விதிகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றுவதல்ல; ஒவ்வொரு தனி மனிதரிடமும், தன்னுடைய பாதுகாப்பு மட்டுமின்றி, தங்களது சக பணியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பும், ஆற்றலும் தங்களிடம் உள்ளது எனும் கலாச்சாரத்தை வளர்ப்பது ஆகும்'' என்றார்.

ஹுண்டாய் மோட்டார் இந்தியா தலைமை உற்பத்தி அதிகாரி சி.எஸ்.கோபால கிருஷ்ணன், காஞ்சிபுரம் மற்றும் சென்னை தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் எஸ்.இளங்கோவன், காஞ்சிபுரம் மற்றும்பெரும்புதூர் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குநர்கள் பாலமுருகன் மற்றும் ஜி.அசோக்ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x