Published : 16 Feb 2018 07:47 AM
Last Updated : 16 Feb 2018 07:47 AM

இவரை தெரியுமா?: ரிச்சர்ட் ஃபேர்பேங்க்

கேபிடல் ஒன் நிதிச் சேவை நிறுவனம் மற்றும் வங்கியின் நிறுவனர், தலைமைச் செயல் அதிகாரி. 1994-ம் ஆண்டிலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.

மாஸ்டர்கார்டு அமெரிக்கா பிராந்திய தலைவராக இருந்தவர். வங்கித்துறை திட்டமிடுதல்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர்.

தகவல் மற்றும் தொழில்நுட்பத்தின் வழியாக நுகர்வோர் சந்தையை மாற்ற முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.

ஐபிஎஸ் என்கிற தகவல் சார்ந்த உத்தியை கேபிடல் ஒன் நிறுவனத்தில் செயல்படுத்தி வெற்றிகண்டவர்.

சிறந்த தலைமைச் செயல் அதிகாரி என இன்ஸ்டியூஷனல் இன்வெஸ்டர் பத்திரிக்கையால் கொளரவிக்கப்பட்டவர். சிறந்த வணிகத் தலைவர் என வாஷிங்டன் பத்திரிகையால் பாராட்டப்பட்டவர்.

அமெரிக்கன் பேங்கர் பத்திரிக்கையின் 2006-ம் ஆண்டு சிறந்த வங்கியாளர் விருது பெற்றவர்.

ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்திலிருந்து வணிகவியல் பட்டமும், ஸ்டான்ஃபோர்டு ஸ்கூல் ஆஃப் பிஸினஸில் இருந்து வணிக மேலாண்மைப் பட்டமும் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x