Published : 23 Feb 2018 08:35 AM
Last Updated : 23 Feb 2018 08:35 AM

இயக்குநர்களை நீக்குவதற்கு புதிய விதிமுறைகள்: நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

நிறுவனங்களின் தினசரி அலுவல்கள் இல்லாத இயக்குநர்களை நீக்குவதற்கான விதிமுறைகளை அரசு கடுமையாக்கி உள்ளது. இதன்படி இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்ட தினசரி அலுவல்கள் இல்லாத இயக்குநர்களை நீக்குவதற்கு பங்குதாரர்களில் சிறப்பு தீர்மானம் வேண்டும் என்பதை அரசு கொண்டு வந்துள்ளது.மேலும் நீக்குவதற்கு முன்னர் அவர்களுக்கான சரியான வாய்ப்புகள் குறித்த கருத்தினையும் கேட்க வேண்டும் என்றும் நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

சில நிறுவனங்களில் நிறுவனர்களின் அழுத்தம் காரணமாக சில காலாண்டுகள் மட்டும் செயல்படுவதும், தங்களது பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கு முன்னரே நீக்கப்படுவதும் நடக்கிறது. இதன் காரணமாக நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் இந்த முடிவினை மேற்கொண் டுள்ளது.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள விதிமுறைப்படி சிறப்பு தீர்மானத்துக்கான கூட்டத்தில் 75 சதவீத பங்குதாரர்கள் கலந்து கொண்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவீதம் பேர் அதை முன்மொழிந்தால் மட்டுமே தீர்மானம் செல்லும்.

நிறுவனங்களின் இயக்குநர் குழு அதிகாரத்தை சமநிலையில் வைக்கவும், நிர்வாகம் சிறப்பாக நடப்பதற்கும் இந்த முடிவு அவசியமானதாக இருக்கும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. நிறுவனங்கள் சட்டத்தின் 169வது பிரிவின் கீழ் இந்த விதிமுறை கொண்டுவரப்படுகிறது.

தற்போது பொறுப்புகள் இல் லாத இயக்குநர்கள் இரண்டாவது முறையாக நியமிக்கப்படும்போது மட்டுமே சிறப்பு தீர்மானத்தின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். நீக்கும்போது சாதாரண தீர்மானத்தின்படியே நீக்கப்படுகின்றனர்.

இது தொடர்பாக நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சிறந்த நிர்வாகத்துக்கும், நிறுவனங்களின் இயக்குநர் குழு அதிகாரம் பாரபட்சமில்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் இந்த மாற்றம் செய்யப்படுகிறது என்று கூறியுள்ளது.

இந்த முடிவை தொழில்துறையினர் பலரும் வரவேற்றுள்ளனர். அரசின் இந்த முடிவுக்கு பின்னர் பொறுப்புகளற்ற இயக்குநர்களின் செயல்பாடு மேலும் சிறப் பாக இருக்கும் என்று கூறினர்.

கடந்த மாதத்தில் நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச் சக அதிகாரிகள், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் பொறுப்புகளற்ற இயக்குநர்களின் விவரங்களை சேகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x