Published : 07 Feb 2018 03:02 PM
Last Updated : 07 Feb 2018 03:02 PM

ஹூண்டாய் புதிய எலைட் ஐ20 கார் அறிமுகம்

ஹூண்டாய் நிறுவனத்தின் பெருமளவு வரவேற்பு பெற்ற 2018 எலைட் ஐ20 காரை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில், ‘ஆட்டோ எக்ஸ்போ 2018’ வாகன கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நிறுவனங்கள் இருசக்கர வாகனங்கள், கார், சரக்கு வாகனங்கள் என பலவற்றையும் அறிமுகம் செய்து வருகின்றன.

தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம், 2018 எலைட் ஐ20 காரை இந்த கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ஐ20 கார்கள் பெருமளவு வரவேற்பு பெற்ற நிலையில், அதன் புதிய 2018ம் ஆண்டு மாடல் காரும் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவற்பை பெறும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. எலைட் ஐ20 கார் 2014ம் ஆண்டு அறிமுகமாகி, 4 லட்சம் என்ற எண்ணிக்கையில் விற்று தீர்ந்துள்ளது.

இதுகுறித்து ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஒய்.கே. கூ, கூறுகையில் ‘‘எலைட் ஐ20 கார்கள் டீசல் மற்றும் பெட்ரோல் என இரு விதங்களிலும் கிடைக்கிறது. பெட்ரோல் கார் 5.34 லட்சம் ரூபாய் முதல் 9.90 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. டீசல் கார் ரூ. 6.73 லட்சம் முதல் ரூ. 9.15 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளோபல் இவி காரும் இந்த கண்காட்சியி்ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இவி காரை 2019ல் அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளோம்’’ எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x