Published : 01 Feb 2024 03:17 PM
Last Updated : 01 Feb 2024 03:17 PM

2 கோடி வீடுகள் முதல் ‘வரி வழக்கு’ ரத்து வரை: இடைக்கால பட்ஜெட் 2024-ல் புதிய அறிவிப்புகள் என்னென்ன?

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பு விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்ட இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள புதிய அறிவிப்புகள்:

  • அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும்.
  • வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்.
  • நாடு முழுவதும் கூடுதலாக மருத்துவ கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும்.
  • கர்ப்பப் பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும்.
  • ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • அங்கன்வாடி மற்றும் ஆஷா மருத்துவ பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
  • பால் உற்பத்தியை அதிகரித்து பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் பெற நடவடிக்கை.
  • பால்பண்ணை உரிமையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் புதிய திட்டம்.
  • நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்.
  • தொழில்நுப்டம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • 40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக தரம் உயர்த்தப்படும்.
  • தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக ரூ.1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும்.
  • நடுத்தர வர்க்கத்தினருக்கான வீட்டு வசதி திட்டம் அறிமுகப்படுத்தும்.
  • 3 சரக்கு பொருளாதார ரயில்வே வழித்தடம் புதிதாக அமைக்கப்படும்.
  • 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதன்படி வரும் ஆண்டுகளில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக்கப்படுவர்.
  • மாநிலங்களுக்கு 50 ஆண்டுகால வட்டியில்லா கடன் வழங்க முடிவு
  • புத்தொழில் நிறுவனங்களுக்கு வரி ஊக்கத்தொகை
  • தீவுப் பகுதிகளில் துறைமுகங்கள் அமைக்க திட்டம்
  • எண்ணெய் வித்துக்களுக்கான சுயசார்பு இயக்கம் அமலாக்கப்படும்

5 ஒருங்கிணைந்த கடல்சார் பூங்காக்கள்: மீன்வளத் துறையை ஊக்குவிக்கும் வகையில், ஐந்து ஒருங்கிணைந்த கடல்சார் பூங்காக்கள் அமைக்கப்படும். பிரதமரின் மத்ஸ்ய சம்படா திட்டம் கீழ்க்கண்டவாறு முடுக்கி விடப்படும்: 1. நீர்வாழ் உயிரின வளர்ப்பு உற்பத்தித் திறனை தற்போதுள்ள 3 டன்னிலிருந்து ஹெக்டேருக்கு 5 டன்னாக அதிகரித்தல்; 2. ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடியாக இரட்டிப்பாக்குதல்; 3. எதிர்காலத்தில் 55 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல். | நீலப் பொருளாதாரம் 2.0-க்கான பருவநிலை நெகிழ்திறன் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக, ஒருங்கிணைந்த மற்றும் பல்துறை அணுகுமுறையுடன் கடலோர மீன்வளர்ப்பு மற்றும் கடல்வாழ் உயிரின வளர்ப்பு ஆகியவற்றுக்கான திட்டம் தொடங்கப்படும்.

  • வந்தே பாரத் ரயில்களை அதிக எண்ணிக்கையில் இயக்க முடிவு
  • சுற்றுலா மேம்பாட்டுக்காக நீண்டகால அடிப்படையிலான கடன் உதவி வழங்கப்படும்.
  • ரூ.25,000 வரையிலான வரி தொடர்பான பழைய வழக்குகள் ரத்து செய்யப்படும். இதன்மூலம் 1 கோடி பேர் பயனடைவர்.
  • வேகமாக உயர்ந்து வரும் மக்கள் தொகையால் ஏற்படும் சவால்களை கண்டறிய உயர் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்படும்.
  • கார்ப்பரேட் வரி 22% ஆக குறைப்பு.

இதையும் படிக்க: > மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 - முக்கிய அம்சங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x