Published : 12 Jan 2024 05:44 AM
Last Updated : 12 Jan 2024 05:44 AM

ரூ.18 லட்சம் கோடியைக் கடந்தது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பு

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.18 லட்சம் கோடியைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்றைய வர்த்தக முடிவில் அதன் பங்கு மதிப்பு 2.58 சதவீதம் உயர்ந்து ரூ.2,719-க்கு வர்த்தகமானது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்நிறுவனத்தின் மதிப்பு 12 சதவீதம் உயர்ந்துள்ளது.

குஜராத் ஜாம்நகரில், 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் திருபாய் அம்பானி பசுமை ஆற்றல் கட்டமைப்பு திட்டம் இவ்வாண்டு இரண்டாம் பாதியில் தொடங்கும் என்று நேற்றுமுன்தினம் முகேஷ் அம்பானி அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு மதிப்பு உச்சம் தொட்டுள்ளது.

பல்வேறு சர்வதேச பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனங்கள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு மேலும் உயரும் என்று மதிப்பிட்டுள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு ரூ.2,885ஆக உயரும் என்று கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனமும், ரூ.3,125 ஆக உயரும் என்று ஜெஃப்ரிஸ் நிறுவனமும் கணக்கிட்டுள்ளன. நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 63.47 புள்ளிகள் உயர்ந்து 71,721 ஆகவும், நிஃப்டி 28.5 புள்ளிகள் உயர்ந்து 21,647 ஆகவும் நிலைகொண்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x