Last Updated : 29 Jan, 2018 03:51 PM

 

Published : 29 Jan 2018 03:51 PM
Last Updated : 29 Jan 2018 03:51 PM

பொருளாதார ஆய்வறிக்கை: வங்கித்துறையின் செயல்பாடு மந்தம்; வாராக்கடன் அளவு அதிகரிப்பு

2017-18ம் ஆண்டு பொருளாதார ஆய்வு அறிக்கையில் அரசு வங்கித்துறைகளின் செயல்பாடு மிகவும் மந்தமாக இருப்பதாகவும், வாராக்கடன் அளவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-18ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதில் வங்கிகள் குறித்து கூறப்பட்டுள்ளதாவது-

2017-18ம் ஆண்டில் வங்கித்துறையின் செயல்பாடு குறிப்பாக அரசு வங்கிகளின் செயல்பாடு மந்தமாகவே, சுறுசுறுப்பின்றி இருக்கிறது.

கார்பரேட் திவால் தீர்வு நடைமுறை (சிஐஆர்பி) மூலம் வங்கிகள் தங்களின் நிலுவை கடன்களை வசூலிப்பதில் சிறிய அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஏறக்குறைய 525 நிறுவங்கள் ரூ. ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 810 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றன.

வாராக்கடனைப் பொறுத்தவரை, வர்த்தக வங்கிகள்(எஸ்சிபி) கடந்த 2017 மார்ச் முதல் செப்டம்பர் வரை 9.6 சதவீதத்தில் இருந்து 10.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதேசமயம், அரசு துறை வங்கிகள் வராக்கடன் கடந்த 2017 மார்ச் முதல் செப்டம்பர் வரை 12.5 சதவீதத்தில் இருந்து 13.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வங்கிகள் மூலம் சேவைத் துறைக்கும், தனிநபர்களுக்கும் கடன் கொடுப்பது தொடர்ந்து பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது.

ஆனால், தொழில்துறைக்கு கடன் கொடுப்பதில் கடந்த 2016 அக்டோபர் முதல் 2017ம் ஆண்டு நவம்பர் வரை எதிர்மறையான வளர்ச்சி கொண்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x