Published : 13 Dec 2023 09:33 PM
Last Updated : 13 Dec 2023 09:33 PM

2023-ன் கடைசி முகூர்த்த நாள்: மதுரை மல்லிகைப்பூ கிலோ ரூ.3,500-க்கு விற்பனை

மதுரை: 2023ம் ஆண்டின் கடைசி முகூர்த்தநாளான இன்று மதுரை மல்லிகைப்பூ கிலோ ரூ.3,500 விற்பனையானது. மற்ற பூக்கள் விலையும் வழக்கமான நாட்களைவிட கூடுதலாக விற்பனையானது.

மதுரை மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த பூ மார்க்கெட் செயல்படுகிறது. தென் மாவட்டங்களில் இருந்து அனைத்து வகை பூக்களும், இந்த மார்க்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். வியாபாரிகளும், நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்து விற்பனைக்கு பூக்களை கொண்டு வருகின்றனர். இந்த மார்க்கெட்டில் மதுரை மல்லிகைப்பூ விற்பனைக்கு சிறப்பு வாய்ந்தது. இங்கிருந்து தமிழகத்தின பிற மாவட்டங்களுக்கும், உலக நாடுகளுக்கும் மல்லிகைப்பூ ஏற்றுமதியாகிறது.

ஒவ்வொரு மூகூர்த்த நாட்கள், பண்டிகைகள் நாட்களில் மதுரை மல்லிகை மட்டுமில்லாது மற்ற பூக்கள் விலையும் உயரம். ஆனால், மல்லிகைப்பூக்கு ஆண்டு முழுவதுமே வரவேற்பு இருப்பதால் அந்த பூக்கள் மட்டும் விலை குறையாமலே விற்பனையாகும். 2023-ம் ஆண்டின் கடைசி முகூர்த்த நாளான இன்று பூக்கள் விலை உயர்ந்தது. மதுரை மல்லிகை ரூ.3,500க்கு விற்பனையானது. முல்லைப்பூ ரூ.1000, பிச்சிப்பூ ரூ.700, சம்பங்கி ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.180, பன்னீர் ரூ.250, அரளி ரூ.130, செண்டுமல்லி ரூ. 120, செவ்வந்தி ரூ.180 போன்ற விலைகளில் விற்பனையானது.

அடுத்து வைகுண்ட ஏகாதசி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் வர உள்ளதால் தற்போது உயர்ந்துள்ள மதுரை மல்லிகை மற்றும் இதர பூக்கள் விலை குறைய வாய்ப்பில்லை. தொடர்ந்து விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் விற்பனையும் சரிய வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x