Published : 23 Jan 2018 02:19 PM
Last Updated : 23 Jan 2018 02:19 PM

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக அதிகரிக்கும்: சர்வதேச நிதியம் மதிப்பீடு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2018ம் ஆண்டில் 7.4 சதவீதமாக அதிகரிக்கும் என சர்வதேச நிதியம் மதிப்பிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சர்வதேச நிதியம் சார்பில் உலக அளவில் பொருளாதார சூழல் குறித்த அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

‘‘இந்தியாவில் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால், 2017ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி சரிவை சந்தித்தது. இதனால் 2017ல் பொருளாதார வளர்ச்சி 6.7 ஆக மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டுள்ளது.

இதனால் நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரிக்கும். 2019ம் ஆண்டில் இது 7.8 சதவீதமாக உயரும்.

அதேசமயம் சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் தற்போது 6.8 சதவீதமாக உள்ளது. 2018ம் ஆண்டில் 6.6 சதவீதமாகவும், 2019ம் ஆண்டில் 6.4 ஆக சரிவடைய வாய்ப்புள்ளது.

இந்தியாவின் வர்த்தக சந்தையும், உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இதனால் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x