Published : 03 Jan 2018 10:20 AM
Last Updated : 03 Jan 2018 10:20 AM

இமாமி விளம்பர தூதர் சல்மான் கான்

நுகர்பொருள் விற்பனையில் முன்னணியில் உள்ள இமாமி நிறுவனம் தனது சமையல் எண்ணெய் வகைகளை விளம்பரப்படுத்த பாலிவுட் நடிகர் சல்மான்கானை விளம்பரத் தூதராக ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கெனவே இந்நிறுவன சமையல் எண்ணெய் வகைகளை விளம்பரப்படுத்தும் பணியில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஒப்பந்தமாகியுள்ளார். அவருடன் தற்போது சல்மான் கானும் கை கோர்க்கிறார்.

சல்மான் கான் மூலம் புதிய விளம்பரப் படங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளரை சென்றடைய முடியும் என்று நிறுவனத்தின் இயக்குனர் மணீஷ் கோயங்கா தெரிவித்துள்ளார்.

இமாமி நிறுவனம் தனது பொருட்களை பிரபலப்படுத்த ஏற்கெனவே ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன், கரீனா கபூர், கங்கனா ரணாவத், ஷாகித் கபூர், சானியா மிர்சா உள்ளிட்டோரை பயன்படுத்தி வருகிறது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x