Published : 18 Jan 2018 10:37 AM
Last Updated : 18 Jan 2018 10:37 AM

அடுத்த 10 ஆண்டுகளில் 15 சதவீத வளர்ச்சி: வோல்வோ குழுமம் இலக்கு

அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 15 சதவீத வளர்ச்சியை எட்ட இலக்கு வைத்துள்ளதாக வோல்வோ குழுமம் கூறியுள்ளது. இது தொடர்பாக வோல்வோ நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது,

இந்தியாவில் செயல்பாடுகளைத் தொடங்கி 20 ஆண்டுகளை நிறுவனம் நிறைவு செய்துள்ளது. தற்போது ஆண்டு வளர்ச்சி விகிதம் ஒட்டுமொத்தமாக 10 சதவீதமாக உள்ளது. அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் 15 சதவீத வளர்ச்சியை எட்ட நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகள் எங்களுக்கு மிகச் சிறப்பான ஆண் டாக இருந்தன. இதுவரை இல் லாத வகையில் சுமார் 40 % வளர் ச்சியை எட்டியுள்ளோம் என்று வோல்வோ குழுமத்தின் இந்திய தலைவரும் நிர்வாக இயக்குநருமான கமல் பாலி கூறினார். அடுத்த 7-10 ஆண்டுகளில் 15 % வளர்ச்சி என்பது ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப சாத்தியமாகும் என்றார்.

பொருளாதார வளர்ச்சியில் பல்வேறு அம்சங்களோடும் எங்களது வளர்ச்சியை இணைத்து பார்க்கிறோம் என்றும் கமல் சுட்டிக் காட்டினார். குறிப்பாக நகர்ப்புற விரிவாக்கத்துக்கு ஏற்ப பேருந்துகள் அவசியமாக உள்ளன. சாலை கட்டமைப்பு மற்றும் கட்டுமான கருவிகள், சரக்கு போக்குவரத்து போன்றவற்றுக்கு டிரக்குகள் தேவையாக இருக்கின்றன என்று சுட்டிக்காட்டிய கமல், அனைத்தும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றார்.

2018-ம் ஆண்டில் நிறுவனத்தின் வளர்ச்சி 10 அல்லது 12 சதவீதத்துக்குள் இருக்கும். சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் சாதகமான அம்சங்களை உருவாக்கியுள்ளது என்றார்.

வோல்வோ குழுமம் இந்தியாவில் பல்வேறு தொழில்களில், பல பிராண்டுகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக வோல்வோ பஸ், வோல்வோ பெண்டா இன்ஜின், வோல்வோ கட்டுமான கருவிகள், யுடி பேருந்து, வோல்வோ டிரக், ஐஷர் டிரக், பேருந்து என பல தொழில்களில் ஈடுபட்டுள்ளது.

ஐஷர் மற்றும் வோல்வோ டிரக்குகளை இந்தியாவில் கூட்டு நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்து வருகிறது. ஒட்டுமொத்தமாத கடந்த 20 ஆண்டுகளில் நிறுவனம் ரூ. 2,500 கோடி வரை முதலீடு செய்துள்ளது. மேலும் எங்களது கூட்டு நிறுவனமான ஐஷர் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் மேலும் ரூ. 300 கோடிவரை முதலீடு செய்துள்ளது என்றார்.

கடந்த ஆண்டில் 400 பேருக்கு புதிதாக வோல்வோ வேலைவாய்ப்பு அளித்துள்ளது. எங்களது கூட்டு நிறுவனம் உள்பட ஒட்டுமொத்தமாக 4,000 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் யுரோ 4 இன்ஜின்களை ஸ்வீடன், பிரான்ஸ் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கிவிட்டோம். பேருந்து தவிர கட்டுமான கருவிகளும் இந்தியாவிலிருந்து தென் கிழக்காசிய நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள், மத்திய கிழக்கு, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். இதற்கிடையில் எலெக்ட் ரிக் மற்றும் ஹைபிரிட் தயாரிப்புகளில் 5000 பேருந்துகள் உலகம் முழுவதும் இயங்கிவருகிறது. இந்தியா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இரண்டு ஹைபிரிட் பேருந்துகள வாங்கியது. நவி மும்பையில் தற்போதுவரை இவை சிறப்பாக செயல்படுகின்றன என்றார்.

யுடி பிராண்ட் பேருந்து நடுத்தர சொகுசு வசதி கொண்டதாக இரு க்கும். விரைவில் அதை அளிக்க முயற்சி செய்து வருகிறோம் என்றும் கமல் கூறினார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x