Published : 11 Dec 2017 10:01 AM
Last Updated : 11 Dec 2017 10:01 AM

பட்ஜெட்டில் கவர்ச்சி திட்டங்கள் இருக்காது: ரதின் ராய் தகவல்

பட்ஜெட்டில் கவர்ச்சி திட்டங்கள் ஏதும் இருக்காது என பிரதமரின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ரதின் ராய் தெரிவித்திருக்கிறார். மேலும் செலவுகளை நெறி முறைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு உறுதியாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மே லும் கூறியதாவது: அடுத்தாண்டு பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட் மேலும் ஒரு சிறப்பான பட்ஜெட்டாக இருக்கும். இந்த பட்ஜெட்டில் எந்தவிதமான கவர்ச்சி திட்டங்களும் இருக்காது என்றே நினைக்கிறேன். அதே சமயத்தில் செலவு கள் விஷயத்தில் மத்திய அரசு உறுதியாக இருக்கும். வரும் பட்ஜெட் அரசியல் காரணங் களுக்காக இருக்காது.

அரசு பல சீர்திருத்தங்களை தொடங்கி இருக்கிறது. அதனை முழுமையாக செய்து முடிப் பதற்கு கால அவகாசம் தேவைப்படும். அதனால் புதிதாக சீர்த்திருத்தங்களைத் தொடங்குவதை விட, ஏற்கெனவே தொடங்கிய வேலைகளை முழுமையாக முடிக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு எடுக்கும் முடிவுகளை முழுமை யாக மதிக்கிறோம். வட்டி விகிதங்கள் குறைவது நல்லதுதான். அதே சமயத்தில் நாம் சேமிப்பையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்தியாவை பொறுத்தவரை 7 சதவீத வளர்ச்சி என்பது அடையக்கூடியதுதான். அந்த இலக்கை நாம் எட்டி வருகிறோம். பணவீக்கம் குறைவாக இருப்பது, நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைவாக இருப்பது ஆகிய சூழலில் 6.3 சதவீத சராசரி வளர்ச்சி என்பது நல்ல வளர்ச்சி விகிதம்தான். 8 சதவீதத்துக்கு மேலான வளர்ச்சியை எட்டுவதற்கு, நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை நிதிக்கொள்கை, நாணயமாற்று கொள்கை, வளர்ச்சி, பேரியல் பொருளாதார சூழல் ஆகியவை சிறப்பாக இருக்கிறது. வேலை வாய்ப்பினை உருவாக்குவதற்கு, உள்நாட்டு தேவையினை உருவாக்க வேண்டும். வேலையின்மை பிரச்சினையை தீர்ப்பதற்கு, வேலைகள் குறித்து மட்டும் கவனமாக இருக்க முடி யாது.

அடுத்த பத்தாண்டுகளில் இந்தியர்களின் தேவையை இந்தியர்களே பூர்த்தி செய்வது போன்ற சூழலை உருவாக்க வேண்டும். அப்போதுதான் வேலையின்மை பிரச்சினையை தீர்க்க முடியும் என ரதின் ராய் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x