Published : 21 Sep 2023 11:27 AM
Last Updated : 21 Sep 2023 11:27 AM

செப்.21, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 21) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,240-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வியாழக்கிழமை) கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,530 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,240-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,000-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை 0.30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.78,000 ஆக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x