Published : 13 Dec 2017 11:01 AM
Last Updated : 13 Dec 2017 11:01 AM

ஆமதாபாத்தில் ‘பிளாஸ்ட் இந்தியா 2018’ - தொழில் முனைவோர் பங்கேற்க அழைப்பு

‘பிளாஸ்ட் இந்தியா 2018’ வர்த்தகக் கண்காட்சி எதிர்வரும் பிப்ரவரி 7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. அனைத்திந்திய அளவில் 10-வது முறையாக இது நடைபெறவுள்ளது.

" பிளாஸ்ட் இந்தியா வர்த்தகக் கண்காட்சி, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. உலகின் 2வது பெரிய பிளாஸ்டிக் கண்காட்சியாகவும், தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கண்காட்சியாகவும் பெருமை பெற்றுள்ள இக்கண்காட்சியானது, புதிய வளர்ச்சிப் போக்குகள், தொழில் நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பற்றி புத்தறிவினைப் பெறுவதற்கு பெரிதும் கை கொடுக்கும்.பிளாஸ்ட் இந்தியா பவுண்டேசனின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இக்கண்காட்சிக்கு இந்திய அரசும், குஜராத் மாநில அரசும், தொழில் விரிவாக்கத்திற்கான இண்டக்ஸ் (iNDEXTb) அமைப்பும் உரிய நிதி ஆதரவை வழங்குகின்றன.

40க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2 லட்சத்திற்கும் அதிகமான தொழில் சார்ந்த பார்வையாளர்கள் இக்கண்காட்சிக்கு வருகை தரவுள்ளனர். பிளாஸ்டிக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள எக்ஸான் மொபில், டவ் கெமிக்கல்ஸ், ரீஃபின்ஹாசர் ஜி.எம்.பி.எச். போன்ற உலகளவில் முன்னணியிலுள்ள தொழில் நிறுவனங்கள் இதில் பங்கேற்க உள்ளன

‘பிளாஸ்ட் இந்தியா 2018’ வர்த்தகக் கண்காட்சியின் அரங்குகள், கலவைப் பொருள்கள் (Composite Material), ஆட்டோமோட்டிவ் (Automotive), மருத்துவம் மற்றும் உடல் நலம் (Medical & Health Care), விளையாட்டு மற்றும் 3டி பிரிண்டிங் (Sports & 3D Printing), மாதிரி உருவாக்கம் (Prototyping) ஆகிய 5 பிரிவுகளில் அமையவுள்ளது.

வர்த்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் கருத்து பரிமாற்ற மாநாடுகள் நடைபெறவுள்ளன.பொருள் மற்றும் எந்திர விற்பனையாளர்களும், வாங்குவோரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வதற்கான நல்வாய்ப்பினை இது அளிக்கிறது. எச்.டி.எப்.சி. (HDFC) வங்கி போன்ற நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில் இந்தியாவின் பிளாஸ்டிக் தொழில்துறை உலகளாவிய வளர்ச்சியில் மேலும் வலிமை பெறுவதற்கு இந்த வர்த்தகக் கண்காட்சி வழி வகுக்கும். பிளாஸ்டிக் தொழிலின் வளர்ச்சி விகிதத்தை மேலும் விரைவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் பிளாஸ்ட் இந்தியா பவுண்டேசன் மேற்கொண்டு வருகிறது.

இந்தக் கண்காட்சியில் தொழில் முனைவோர் பங்கேற்று பயன்பெறுமாறு பிளாஸ்ட் இந்தியா பவுண்டேசன் அழைப்பு விடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x