Last Updated : 22 Dec, 2017 10:34 AM

 

Published : 22 Dec 2017 10:34 AM
Last Updated : 22 Dec 2017 10:34 AM

வணிக நூலகம்: அறிவுசார் முடிவுகளுக்கு ஐந்து கேள்விகள்

ணிகத்தில் நிலையான முடிவுகள் எடுப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. ஒன்று போலவே தோன்றும் சில செய்திகளில் முடிவுகள் மாறிவரும். சில நேரங்களில் கொடுக்கப்பட்ட தரவுகளுக்கு மாற்று விடைகள் அமைவது இல்லை. சில நிகழ்வுகளுக்கு கண்ணுக்குத் தெரிந்ததைத் தாண்டி மங்கலான சில முடிவுகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். விடை என்ன என்று தெரியாத, பிரச்சினைகளை புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலை எல்லோருக்கும், எப்போதும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கைவசம் உள்ள செய்திகளையும் மற்றும் தரவுகளையும் தாண்டி அறிவுபூர்வமான முடிவுகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். முன் அனுபவம் இல்லாத சூழ்நிலைகளில் அறிவு சார்ந்த விளக்கமான வெளிப்படையான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். 35 ஆண்டுகளுக்கு மேலாக ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் உத்திகள் மேலாண்மை, தலைமை பண்புகள் மற்றும் வணிக நெறிமுறைகள் பற்றி ஆய்வுகள் மேற்கொண்டு அதன் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த புத்தகம் தொழில் முனைவோருக்கும், மேலாளருக்கும், வணிகம் சார்ந்த பணிகளில் முடிவு எடுக்கக்கூடிய இடத்தில் இருக்கும் பணியாளர்களுக்கும் மிகவும் தேவையானது.

மேலாண்மை முடிவுகள் மேற்கொள்ளும் குழுக்களில் இருப்பவர்கள் இதைப்படிக்கும் பொழுது ஏதோ ARISTOTEL, NIETZSCHE, CONFUCIUS, மற்றும் THOMAS JEFFERSON போன்றோருடன் குழுக் கூட்டங்களில் பங்கெடுத்துக் கொள்வதைப் போல உணர்வார்கள். மிகவும் கடினமான அறிவுபூர்வமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொழுது அறிவாளியாகவும், தீர்க்க தரிசியாகவும், அறிஞனாகவும் இல்லாமல் ஒரு மனிதனாக எடுக்கும் முடிவுகள் மகத்தானது. ஏனென்றால், தீர்க்க தரிசனமும், அறிவும் சூழ்நிலை மாற்றங்கள் மற்றும் எதார்த்தத்தை எடுத்துக் கூறாது. மாறாக, அறிவுபூர்வமான பிரச்சினைக்கு தொடர்பு இல்லாத வெளிக்கிரக வாசிகளுக்கு எடுக்கப்படும் முடிவுகள் பூவுலகில் மனிதர்களுக்கு ஏற்றதாக அமையாது. ஒரு மேலாளராக ஒரு பிரச்சினைகளை அணுகும் போதும் எல்லோரையும் கலந்து ஆலோசிக்கும் பொழுதும் பிரச்சினைகளின் தன்மையையும், ஆழத்தையும் சரிவர கவனிக்க வேண்டும்.

குழப்பமல்ல தெளிவே துணை

கிடைக்கப் பெற்ற தரவுகளை சரியான கருவிகள் மற்றும் காரணிகளோடு பொருத்தி அவைகளை முடிவு எடுக்கும் சூழ்நிலையில் சரிவர கையாள்வது குழப்பம் மற்றும் கடினமாக பிரச்சினைகளுக்கு தீர்வு ஆகும். அதி புத்திசாலிதனமான உள்ளுணர்வுகளும், பிரச்சினை மற்றும் குழப்பங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலையும் தெளிவான, அறிவுபூர்வமான முடிவுகளை மேற்கொள்ள உதவாது. குழப்பமான கடினமான பிரச்சினைகள் விவாதத்தின் மூலமும் பகுப்பாய்வின் மூலமும் தீர்ந்துவிடாது. அதையும் தாண்டி தனிநபரின் தீர்க்கமான முடிவுகள் சூழ்நிலைகளுக்குப் பொருந்தும் வகையிலும், பிரச்சினைகளை எளிதாக தீர்க்கும் வகையிலும் அமைகிறது.

ஐந்து காரணிகள்

கொடுக்கக் கூடிய தரவுகள் மற்றும் செய்திகளின் அடிப்படையில் உணர்வுகள் மற்றும் ஈடுபாட்டுடன் இருப்பது தலையானது. அவ்வாறு குழப்பமான அறிவுபூர்வமான ஆழமான, கருத்துகளின் அடிப்படையில் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு கீழ்காணும் ஐந்து முக்கியமான கேள்விகளை நூலாசிரியர் பதிவு செய்கிறார்.

1. விளைவுகள் என்ன

2. தனித்துவமான முக்கியமான கடமைகள் என்ன

3. உலகாயுதமான முடிவுகளா

4. முடிவு எடுக்க தகுதியானவர்களா

5. சரியான முடிவுகளை மேற்கொள்ளுதல்

விளைவுகள் என்ன?

முடிவு எடுக்கும் பொழுது கையில் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதனால் ஏற்படக் கூடிய நல்ல மற்றும் அல்லாத விளைவுகளை அலசி ஆய்வு செய்தல் அவசியம். இருக்கக் கூடிய அனைத்து தரவுகளையும் முடிவாகப் பயன்படுத்தி அவைகளின் வெளிப்பாடுகளில் விளைவுகளின் தாக்கம் பற்றி ஆய்வு செய்து எடுக்கக்கூடிய முடிவுகள் காலத்தையும் வென்று நிற்கும். மாறாக, விளைவுகளை பற்றிய விவேகம் இல்லாத முடிவுகள் யாருக்கும் பயன்தராது. விளைவுகள் நேர்மறையா எதிர்மறையா என்பது பற்றிய எதிர்கால புரிதல் மிகவும் அவசியம். நேர்மறையானவையாக இருக்கும் படி மனிதத்துடன் கூடிய முடிவுகள் வெற்றிக்கு வழிகாட்டும்.

தனித்துவமான முக்கியமான கடமைகள் என்ன?

முடிவு எடுக்கும் பொழுது அந்த முடிவு எடுக்கும் சூழ்நிலைகளில் இருக்கக் கூடிய கடைமைகள் முக்கியமானவையாகும். கடமையை மறந்த முடிவுகள் வெற்றியைத் தராது. நிறைவையும் அளிக்காது. சில நேரங்களில் சில நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களில் இருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொள்வதற்காகத் தனித்துவமான முடிவுகளைக் குழப்பமான மற்றும் தெளிவில்லாத சூழ்நிலைகளில் மேற்கொள்ளுகின்றன. தெளிவில்லாத சூழ்நிலைகளில் தனித்துவமான முடிவுகள் நிறுவனத்திற்கு பலம் சேர்க்கும். அதே நேரத்தில் எடுக்க கூடிய முடிவுகள். நிறுவனத்தின் நலன் சார்ந்ததாகவும், கடமையை மீறாததாக இருப்பது மிகவும் அவசியம்.

சர்வதேச முடிவுகளா?

நிகழ்காலத்தில் தற்கால உலகத்தில் இருக்கக் கூடிய தெளிவில்லாத சூழ்நிலைகளைத் தெளிவுபடுத்துவது மேலாண்மைக்கு அழகு ஆகும். உற்பத்தி திறனும் பணியாளர் நலனும் சில நேரங்களில் முடிவுகள் தற்கால சூழலுக்கு சரிவராத நிலையில் அவைகளை மறுபடியும் பரிசீலனை செய்து சரியான முடிவுகளை மேற்கொள்ளுதல் அவசியம். கற்பனைகளும், உண்மைக்கு மாறானதுமான முடிவுகள் நிறுவனங்களை வெற்றியை நோக்கி நகர்த்தாது. மாறாக, அதுபோன்ற வித்தியாசமான முடிவுகள் நிறுவனங்களை நிலைகுலைந்து போகச் செய்துவிடும். எளிமையான அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் இருக்கும் முடிவுகள் நிறுவன நலனை மேம்படுத்தும் பணியாளர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும். வானத்து நிலவாக எடுக்கக் கூடிய முடிவுகள் நிதர்சன உண்மைக்கும் நிகழ்கால நடப்புகளுக்கும் பொருந்தாது. ஆகவே அதுபோன்ற முடிவுகளை தவிர்த்தல் நிறுவன வெற்றிக்கு வழிகாட்டும்.

முடிவு எடுக்க தகுதியானவர்களா?

முடிவு எடுப்பது என்பது விஞ்ஞானபூர்வமான, அறிவுபூர்வமான மனிதம் தோய்ந்த சூழ்நிலையாகும். அது போன்ற நிலைகளில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றோ உலகாயுதமான முடிவுகளாக இல்லாமல் இருந்தலோ அவை பணியாளர்களுக்கு பயன்படாது. பயன்படாத முடிவுகள் பணியாளர்களை எதிர்த்து எழத் தூண்டும். தகுதியான முடிவுகள் தகுதியான நபர்களால் எடுக்கப்படும் பொழுது அவை நிறுவன வளர்ச்சி சார்ந்ததாக இருக்கும். அது போன்ற சூழ்நிலைகளில் நிறுவனமும் வெற்றி பெறும். முடிவுகளும் மேம்படும்.

சரியான முடிவுகளை மேற்கொள்ளுதல்

மேலே கூறிய நான்கையையும் இணைத்து, தொகுத்து, பகுத்து பயன்பாட்டில் கொண்டு வரும் நிறுவன மேலாளர்கள் குழப்பமான கடினமான சூழ்நிலைகளிலும் வெற்றி கேள்வி குறியாக இருக்க கூடிய சூழ்நிலைகளிலும் வெற்றியடைவார்கள். சரியான முடிவுகள் மேற்கொள்ளுதல் என்பது குழப்பமான கடினமான சூழ்நிலைகளை பகுத்து ஆய்ந்து. தொலைநோக்கு பார்வையில் முடிவுகளை மேற்கொள்ளுதல் ஆகும். அது போன்ற நிலைகளில் உலகாயுதம் அல்லாத முடிவுகள் மற்றவர்களால் எளிதில் ஏற்றுக் கொள்ளப்படாது.

இந்த நூலில் மிகப்பெரிய விஞ்ஞான கண்டுப்பிடிப்புகளோ, நுண்ணறிவு சார்ந்த தீர்வுகளோ கூறப்படவில்லை. மேலே குறிப்பிட்ட வரிசை எண்கள் 1 முதல் 4 வரை உள்ள உலகாயுதமான உண்மையான யாரும் ஏற்றுகொள்ள கூடிய முடிவுகளை எடுப்பது என்பதைப் பற்றிய நீரோடை போன்ற விளக்கமாகும். தொகுப்பில் உள்ளது சிறிதளவு. புத்தகம் நிறைய செய்திகளைக் கூறும்.

rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x