Published : 25 Nov 2017 10:06 AM
Last Updated : 25 Nov 2017 10:06 AM

51 மருந்துகளின் விலை குறைப்பு

புற்றுநோய், இருதய நோய், தோல் நோய் உள்ளிட்டவற்றின் சிகிச்சைக்கு வழங்கப்படும் 51 மருந்துகளின் அதிகபட்ச விலையை தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையமான என்பிபிஏ நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது..

அதாவது முக்கிய நோய்களுக்கான மருந்துகளின் விலை ஏற்கெனவே விற்ற விலையிலிருந்து 6 முதல் 53 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.மேலும் 23 அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் சில்லரை விலையையும் என்பிபிஏ நிர்ணயம் செய்துள்ளது. 2013-ம் ஆண்டு மருந்து விலை குறைப்பு விதி பிரிவு 1-ன் கீழ் இந்த விலையை என்பிபிஏ நிர்ணயம் செய்திருக்கிறது. புற்றுநோய் சிகிச்சைக்கான ஆக்ஸாலிபிளாடின் (oxaliplatin) ஊசி மருந்து, தட்டம்மை ரூபெல்லா, ஜப்பனிய மூளை வீக்கம் (encephalitis) நோய்க்கான மருந்துகளின் அதிகபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. மேலும் சேவபுளூரேன், பைட்டோமெனடியோன், காசநோய் தடுப்பு மருந்தான பிசிஜி ஆகியவற்றின் விலையும் மாற்றி யமைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x