Published : 26 Nov 2017 11:25 AM
Last Updated : 26 Nov 2017 11:25 AM

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் மக்களின் வருமானம் அதிகரித்துள்ளது: தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் கருத்து

இந்தியாவில் வாழும் மக்களின் வருமானம் கடந்த 30 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. பிராந்திய அளவில் வேறுபாடுகள் இருந்தபோதிலும் வருமானம் உயர்ந்துள்ளதை மறுக்க முடியாது என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சீரான வளர்ச்சி, வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட காரணங்கள் மட்டுமின்றி சிசு இறப்பு மரணம் குறைந்ததும் பொருளாதார வளர்ச்சியின் அடையாளங்கள்தான் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் முன்னெச்சரிக்கை வளர்ச்சி வழிகள் மற்றும் அதன் எதிர்காலம் எனும் தலைப்பில் தெலங்கானா மனிதவள துறை மையம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசிய அவர், மாநிலங்களிடையே வேறுபாடுகள் நிலவினாலும் மக்களின் வருமானம் உயர்ந்துள்ளது என்றார்.

மானியத்தை வறிய பிரிவு மக்களுக்கு சமமாக பிரித்தளிப்பதன் மூலம் சமூகத்தில் அவர்களது நிலையை மேம்படச் செய்ய முடியும். இதேபோல அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றச் செய்து சமூக நீரோட்டத்தில் கலக்கச் செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட வேண் டும் என்றார்.

தொழில்புரிவதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா 100-வது இடத்துக்கு முன்னேறியதைக் குறிப்பிட்டு பாராட்டிய அவர், இத்தகைய ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலமாகத்தான் அந்நிய நேரடி முதலீட்டை சுகாதாரம் மற்றும் கல்வித் துறையில் எதிர்பார்க்கலாம் என்று சுட்டிக் காட்டினார்.

இந்த கருத்தரங்கில் 200 சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் பங் கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x