Published : 08 Jul 2014 11:56 AM
Last Updated : 08 Jul 2014 11:56 AM

ராஜன் ஆனந்தன் - இவரைத் தெரியுமா?

$ கூகுள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். 2011-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

$ இலங்கைத் தமிழரான இவரது தந்தை ஒரு கின்னஸ் சாதனையாளர்.

$ கூகுள் நிறுவனத்துக்கு முன்பு மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். அதற்கு முன்பு டெல் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவராக இருந்தார்.

$ டெல் நிறுவனத்தின் வியாபாரத்தை 25 கோடி டாலரிலிருந்து 80 கோடி டாலராக உயர்த்தினார். டெல் நிறுவனத்தின் நிறுவனர் மைக்கேல் டெல்லின் நேரடி உதவியாளராக இருந்தார்.

$ டெல் நிறுவனத்துக்கு முன்பு மெக்கென்ஸி நிறுவனத்தில் 11 ஆண்டுகள் பணியாற்றினார்.

$ எம்.ஐ.டி.யில்(Massachusetts Institute of Technology) மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கும், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர்.

$ இவர் ஒரு வென்சர் கேபிடலிஸ்டும் கூட. புளூ ஓசின் வென்சர்ஸ் என்ற நிறுவனத்தின் நிறுவனர்களில் இவரும் ஒருவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x