ஜூலை 6, 2023 | தங்கம் விலையில் மாற்றமில்லை; சவரன் ரூ.43,680

ஜூலை 6, 2023 | தங்கம் விலையில் மாற்றமில்லை; சவரன் ரூ.43,680
Updated on
1 min read

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 6) எந்தவித மாற்றமுமின்றி நேற்றைய விலையில் சவரன் ரூ.43,680-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், மே மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.

இந்தநிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வியாழக்கிழமை) கிராம் ரூ.5,460 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.43,680-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.47,360-க்கும் விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி விலை 0.90 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.70-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.76,700 ஆக இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in