Published : 07 Oct 2017 10:21 AM
Last Updated : 07 Oct 2017 10:21 AM

அஞ்சலக சேமிப்பு, பிபிஎப் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம்

அஞ்சலக சேமிப்புத் திட்டம், பிபிஎப் கணக்கு, கிஸான் விகாஸ் பத்திர திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் போன்றவற்றுக்கு ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டங்களில் ஏற்கனவே கணக்கு வைத்துள்ளவர்கள் வருகிற டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

இதுகுறித்து நேற்று மத்திய நிதியமைச்சகம் உத்தரவை வெளியிட்டுள்ளது. ஆதார் எண் இதுவரை வழங்கப்படவில்லையென்றால் இந்த திட்டங்களில் கணக்கு வைத்துள்ளவர்கள் ஆதார் எண் கோரியதற்கான படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கத்தோடு மத்திய அரசு வங்கி கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி உள்ளது. மேலும் ஆதார் எண்ணையும் மொபைல் எண்ணையும் இணைக்கும் திட்டத்தையும் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் மானியங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று அறிவித்திருந்தத்து. இதற்கான காலக்கெடு கடந்த மாதத்தோடு முடிவடைந்த நிலையில் மேலும் மூன்று மாதங்களுக்கு காலக்கெடுவை நீட்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இலவச சமையல் வாயு, மண்ணெண்ணய் மானியம், உர மானியம், பொது விநியோக திட்டம் உட்பட 135 திட்டங்ககளின் பயனாளிகள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x