Last Updated : 15 Aug, 2021 12:55 PM

 

Published : 15 Aug 2021 12:55 PM
Last Updated : 15 Aug 2021 12:55 PM

75-வது சுதந்திர தினம்: விருதுநகரில் கொடியேற்றி கொண்டாட்டம்

நாட்டின் 75 வது சுதந்திர தினம் நாடு முழுதும் வைர விழாவாகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கரோனா பெருந்தொற்று காலத்திலும் அரசின் வழிகாட்டுதலோடு தகுந்த முன்னெச்சரிக்கையோடு விருதுநகர் மாவட்டத்திலும் கொண்டாடப்பட்டது.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் சுதந்திரத்தை மீண்டும் பறைசாட்டும் வண்ணம் வண்ண பலூன்களையும்,வெண் புறாக்களையும் ஆட்சியர் பறக்கவிட்டார். கரோனா பெருந்தொற்று காலத்தில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை,காவல்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட 21 துறைகளை சேர்ந்த 463 அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக தேசபக்தி மிகுந்த நடனம், நாடகம், குழுப் பாடல் மற்றும் தமிழர்களின் பாரம்பரியக் கலையான மல்லர் கம்பம் உள்ளிட்ட கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x